துபாயில் நடைபெற்ற கொழும்பு சாஹிரா பழைய மாணவர்களின் உள்ளக உதைபந்தாட்ட போட்டி (Photos) - Sri Lanka Muslim

துபாயில் நடைபெற்ற கொழும்பு சாஹிரா பழைய மாணவர்களின் உள்ளக உதைபந்தாட்ட போட்டி (Photos)

Contributors

கொழும்பு சாஹிரா பழைய மாணவர்களின் துபாய் கிளை உள்ளக உதைப்பந்தாட்ட போட்டி ஒன்றினை மிர்திப் உள்ளக மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

சகோதரர் பிராஸ் முகமட் தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்ற இப்போட்டிகளில் கொழும்பு சாஹிராவின் எட்டு கழகங்கள் கலந்து கொண்டன.

துபாயில் உள்ள இலங்கை பிரதி தூதுவராலயத்தின் கொன்சல் ஜெனரல் எம் எம் அப்துல் றஹீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் போட்டியில் வெற்றி பெற்ற கழகத்திற்கும் விளையாட்டு வீரர்களுக்கும் வெற்றி கோப்பையை பரிசளித்து கெளரவித்தார்.

முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் துபாய் வாழ் இலங்கையர்கள் பலரும் குடும்பத்தினர் சகிதம் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

sahira1

 

sahira3 sahira2

 

sahira4

Web Design by Srilanka Muslims Web Team