துபாய் இளைஞர் கலாசாரத்தைக் கேலி செய்து வீடியோ - அமெரிக்கருக்கு சிறைத் தண்டனை - Sri Lanka Muslim

துபாய் இளைஞர் கலாசாரத்தைக் கேலி செய்து வீடியோ – அமெரிக்கருக்கு சிறைத் தண்டனை

Contributors

-BBC-

துபாயில் நிலவும் இளைஞர் கலாசாரத்தைப் பற்றி நகைச்சுவையாக கேலி செய்து இணையத்தில் வீடியோ படம் ஒன்றை பிரசுரித்த அமெரிக்கர் ஒருவர், துபாயின் தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அதி உயர் பாதுகாப்பு சிறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மத்தியக் கிழக்கில் இயங்கும் மனித உரிமைக் குழு ஒன்று கூறுகிறது.

ஷெசான் காசிம் என்ற இந்த அமெரிக்கர், துபாயில் ஆலோசகராகப் பணி புரிந்து வந்தார்.

 அவர் இணையக் குற்றங்கள் குறித்த சட்டங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டில் ஏழு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

இதுவரை அவரது விசாரணை குறித்த தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்த வீடியோவில் பங்கேற்ற வெளிநாட்டு பிரஜைகள் பலரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இதுவரை இந்தச் சட்டம் உள்ளூர் அரசியல் ஆர்வலர்களைக் குற்றம் சாட்டி வழக்குப் போடவே பயன்படுத்தப்பட்டு வந்தது என்று கூறும் மனித உரிமைகளுக்கான எமிரேட்ஸ் மையம், காசிம்தான் இந்த சட்டத்தின் கீழ் அதை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முதல் வெளிநாட்டவர் என்று கூறுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team