துருக்கித் தூதுவரை வெளியேறுமாறு எகிப்து உத்தரவு - Sri Lanka Muslim

துருக்கித் தூதுவரை வெளியேறுமாறு எகிப்து உத்தரவு

Contributors

எகிப்திலுள்ள துருக்கித் தூதுவரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

துருக்கியுடனான உறவுகளை குறைத்துக்கொள்வதாகவும் எகிப்து கூறியுள்ளது.

நாட்டின் உள்விவகாரங்களில் துருக்கி தொடர்ந்தும் தலையீடுகளை மேற்கொண்டுவருவதாக எகிப்தின் வெளியுறவு அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

துருக்கியிலுள்ள தமது தூதுவரையும் எகிப்து ஏற்கனவே மீள அழைத்துவிட்டது.

இஸ்லாமியவாதக் கட்சியைச் சேர்ந்த அதிபர் மொஹமட் மோர்ஸி பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டமையை துருக்கி விமர்சித்திருந்தது.

கடந்த ஜூலையில் மோர்ஸி பதவியிலிருந்து அகற்றப்பட்ட நாள் முதல் எகிப்து அரசியல் குழப்பநிலைமைகளில் சிக்கியுள்ளது.

‘பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம்’ என்ற பேரில் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை எகிப்தின் இடைக்கால ஆட்சியாளர்கள் கைதுசெய்து தடுத்துவைத்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team