துருக்கி நிலநடுக்கம் - உயிரிழப்பு 41, 000 ஆக உயர்வு! - Sri Lanka Muslim

துருக்கி நிலநடுக்கம் – உயிரிழப்பு 41, 000 ஆக உயர்வு!

Contributors

துருக்கியில் கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி மிகவும் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. 7.8 ரிச்டராக பதிவான அந்த பூகம்பம் ஏற்படுத்திய தாக்கத்தால் இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

பூகம்பம் நிகழ்ந்து 10 நாட்களை நெருங்கும் சூழலில் ஊரெங்கும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. மலைபோல் கட்டிடக் கழிவுகள் குவிந்துகிடக்க இன்னமும் சில இடிபாடுகளுக்கு அடியிலிருந்து அபயக் குரல்கள் கேட்கின்றன.

துருக்கியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள சல்மான் அல்தீன் என்பவர்,

“நான் அன்டாக்கியா பகுதியில் கடந்த ஒரு வாரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளேன். நான் இத்தனை மரணங்களையும் இவ்வளவு உடல்களையும் என் ஆயுளில் பார்த்ததிலை. அர்மகடான் படத்தில் வரும் காட்சிகள் போல் இங்கே நிலைமை இருக்கிறது. இந்த நகரம் முழுவதுமே பிண துர்நாற்றம் வீசுகிறது” என்று அழுகையுடன் தெரிவித்தார்.

துருக்கி, சிரியாவில் 7 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. துருக்கி, சிரியாவில் 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பூகம்ப பாதிப்பு பகுதிகளை விட்டு வெளியேறியுள்ளனர். அப்பகுதிகள் வாழத் தகுதியற்ற பகுதியாக மாறிவிட்டதாக மக்கள் கூறுகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team