தென்கிழக்குப் பல்கலைக்கழக பரீட்சைகள் ஒத்திவைப்பு » Sri Lanka Muslim

தென்கிழக்குப் பல்கலைக்கழக பரீட்சைகள் ஒத்திவைப்பு

Contributors
author image

ஏ.ஜே.எம்.ஹனீபா

தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தால் நடாத்தப்படவிருந்த 2014/2015ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் வருட, முதலாம் பருவ கலைமாணி வெளிவாரிப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக்,  இன்று (08) அறிவித்தார்.

நாளை மறுதினம் (10) முதல் நடத்தப்படவிருந்த மேற்படி பரீட்சைகள், தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா வைரஸ் தொற்று நோய் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

இந்தப்  பரீட்சைகள் நடைபெறும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும், உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக் மேலும் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka