தென்கிழக்கு பல்கலையின் பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பம் - Sri Lanka Muslim

தென்கிழக்கு பல்கலையின் பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

Contributors

காலவரையறையின்றி மூடப்பட்டிருந்த இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் 02ஆம், 03ஆம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டது

 

கடந்த ஒக்டோபர் மாதம் பிரயோக விஞ்ஞான பீடத்தின் 02ஆம், 03ஆம் வருட மாணவ குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து 53 மாணவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் பிரயோக விஞ்ஞான பீடத்தின் 02ஆம், 03ஆம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆரம்பிக்கபட்டுள்ள கல்வி நடவடிக்கையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவுறும் வரை இவர்களுக்கான தடை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.- அத தெரண

Web Design by Srilanka Muslims Web Team