தென் ஆப்ரிக்காவை சுருட்டியது பாகிஸ்தான் - Sri Lanka Muslim

தென் ஆப்ரிக்காவை சுருட்டியது பாகிஸ்தான்

Contributors

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(யு.ஏ.இ) சென்றுள்ள பாகிஸ்தான்- தென் ஆப்ரிக்கா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றது.

சார்ஜாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது போட்டி துபாயில் நடந்தது.

இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் மிஸ்பா துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

பாகிஸ்தான் அணிக்கு நசிர் ஜாம்ஷெத்(1) ஏமாற்றினார், முகமது ஹபீஸ்(26), அணித்தலைவர் மிஸ்பா(25) பெரிய அளவில் சோபிக்கவில்லை.

பொறுப்பாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் அகமது ஷேசாத்(58) நம்பிக்கை தந்தார். உமர் அக்மல்(18), உமர் அமின்(14) ஏமாற்றினர்.

மற்ற வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில் 209 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தென் ஆப்ரிக்கா சார்பில் மெக்லாரன் 4, மார்னே மார்கல் 3 விக்கெட் கைப்பற்றினர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு இங்ராம்(4), ஸ்மித்(14) ஜோடி ஏமாற்றியது. டுமினி(25), டுபிளசி(12), அணித்தலைவர் டிவிலியர்ஸ்(10), டேவிட் மில்லர்(11) சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.

மற்ற வீரர்களும் பெரிய அளவில் சோபிக்கவில்லை, முடிவில் தென் ஆப்ரிக்க அணி 40.4 ஓவரில் 143 ஓட்டங்களுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது.

பாகிஸ்தான் சார்பில் அப்ரிதி, முகமது இர்பான் தலா 3, சயீத் அஜ்மல் 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலை வகிக்கிறது.

Web Design by Srilanka Muslims Web Team