தென் ஆப்ரிக்க தொடருக்கு கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் - Sri Lanka Muslim

தென் ஆப்ரிக்க தொடருக்கு கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்

Contributors

மும்பை : இந்திய அணியின் தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்துக்கு ஒப்புதல் அளிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்திய அணி தென் ஆப்ரிக்கா சென்று 3 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தது. அந்த தொடரின்போது, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை மைல் கல்லை எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

தங்களை ஆலோசிக்காமல் அட்டவணை விவரத்தை தென் ஆப்ரிக்க வாரியம் தன்னிச்சையாக வெளியிட்டதால் அதிருப்தி அடைந்த பிசிசிஐ, தென் ஆப்ரிக்க தொடருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா வந்து விளையாடுமாறு அவசர அழைப்பு விடுத்தது. திடீர் திருப்பமாக, 200வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்த சச்சின், அந்த போட்டியை சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாட விருப்பம் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட வாரியம், கொல்கத்தா மற்றும் மும்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தது.

இதனால், இந்திய அணியின் தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் கேள்விக்குறியானது. இரு தரப்புக்கும் இடையே நடந்த சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து, அந்த தொடருக்கு ஒப்புதல் அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் அக். 26ம் தேதி நடைபெற உள்ள வாரிய செயற்குழு கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகிறது.

அந்த தொடரில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மட்டுமே இடம் பெறும் எனத் தெரிகிறது. ஒரு டி20 போட்டியை சேர்க்குமாறு தென் ஆப்ரிக்க வாரியம் தரப்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை பிசிசிஐ நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team