தெவனகல முஸ்லிம்களின் இருப்புக்கான அச்சுறுத்தல் : நீதி கிடைக்குமா ? - Sri Lanka Muslim

தெவனகல முஸ்லிம்களின் இருப்புக்கான அச்சுறுத்தல் : நீதி கிடைக்குமா ?

Contributors

அஸ்லம் அலி: தெவனகல முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் ‘ புனித பூமியை’ முஸ்லிம்களிடமிருந்து மீட்போம் என்று என்று கூறி  கடந்த  சில மாதங்களாக பெளத்த தீவிரவாத சக்திகள்  பிரசாரங்களை மேற்கொண்டு வந்துள்ளது  கடந்த    வியாழக்கிழமை மாவனெல்லை நகரில்   பெளத்த  பிக்குகளினால் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்    ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப் படும் என்று  அன்றைய தினம்   அரச தரப்பில் வாக்குறுதி  வழங்கப்பட்டது.  இதை தொடர்ந்து மாலை 5 மணியளவில் பிக்குகள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை  இடைநிறுத்தினர் .

tஉண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற தினம் 28  ஆம்  திகதி  மாலை மாவனல்லை பிரதேச செயலாளர் பிரியங்கனி நெதன்கொட அவர்கள் மற்றும் சப்ரகமுவ மாகாண தொல்பொருளியல் திணைகளத்தின் துணை பணிப்பாளர் திஸ்ஸ மடுரப்பெரும அவர்களும் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திகு வருகை தந்து பிக்குகளின் கோரிக்கையை இரண்டு கிழமையிட்குல் தீர்வை பெற்றுத்தாருவதாக உறுதியளித்திருந்தனர்

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அநுராதபுரயே அமித்த தம்ம, மாகல்கந்தே சுதத்த, ரத்னபுரே நந்தாலோக, மெதிரிகிரியே புண்யாஸார, அம்பத்தலாவே சங்கரத்ன, சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுதத்த, திரியாயே சீலரதன மற்றும் மெதிரிகிரியே சுதத்த ஆகிய தேரர்கள் கலந்து கொண்டனர்

தெவனகலை குன்றும் அதன் சூழவும் பெளத்தர்களின் புனித பூமி இந்தக் குன்றினைச் சுற்றி வாழும் முஸ்லிம்கள் இந்த புனித பூமியை ஆக்கிரமித்தவர்கள். சூழவுள்ள முஸ்லிம்களை தெவனகலையிலிருந்து விரட்டியடிப்போம். அதற்கு பதிலாக பெளத்தர்களை குடியேற்றுவோம் என்றும்  2006 ஆம்  ஆண்டு நீதிமன்ற உத்தரவினால் தெவனகல குன்றில்லிந்து 400 மிட்டர் நிலப்பரப்பு தெவனகல புனித பூமி வலையமாக பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் தொல்பொருளியல் திணைகளம் இந்த பூமியை பாதுகாக்க முன்வரவில்லை இதற்கு காரணம் பிரதேச அரசியல் வாதிகளின் அச்சுறுத்தல் ஆகும் என பெளத்த தீவிரவாத சக்திகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தெவனகல மாவனலையில் இருந்து 6 கீ .மீ . தூரத்தில் ஹெம்மாத்துகம மாவனலை வீதியில் அமைத்துள்ளது அங்குள்ள குன்றில் உச்சியில் 72 ஏக்கர் காணியில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது அது மிகவும் பழமையானது என்று தெரிவிக்கப்படுகிறது . குன்றின் பின்பகுதில் பௌத்தர்கள் வாழ்கின்றனர் குன்றின் முன்பகுதில் 100 வரையான முஸ்லிம் குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனர் இவர்களில் சிலரிடம் 300 ஆண்டுகள் பழமையான காணி உறுதிகளும் இருக்கிறது என்று தெரிவிக்கப் படுகிறது .

d2விகாரையின் எல்லை எந்தவொரு ஆவணத்திலும் தெளிவாக குறிப்பிட்டப் படவில்லை  . இந்த நிலையிலேயே கடும்போக்கு இனவாதிகள் பிரதேச முஸ்லிம்களை வெளியேற்ற முயன்று வருகின்றார்கள். கடந்த பல மாதங்களாக இந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என நோக்குடன் செயல்பட்டு வரும்  கடும்போக்கு  சக்திகளினால்  அண்மையில் பிரதேசத்தின் மஸ்ஜித் ஒன்றுக்கும் தீவிரவாதிக அச்றுத்தல்   விடுக்கப்பட்டுள்ளது . அது தொடர்பில் பொலிசார் வழக்கு பதிவு  செய்திருந்தனர்  .

இந்த நிலையில்  தெவனகல பிரச்சினை சம்பந்தமான விஷேட கூட்டம்   கடந்த 5 ஆம்  திகதி  காலை 10 மணிக்கு கேகாலை கச்சேரியில் நடைபெற்றுள்ளது  . இக்கூட்டதில், கிராமிய விவகாரங்கள் சிரேஷ்ட அமைச்சர்  அத்தாவுட செனவிரத்ன, தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரிய மாவனெல்லை பிரதேச சபை உறுப்பினர்கள், மாவனெல்லை பிரதேச செயலாளர், தொல்பொருளியல் திணைகள அதிகாரிகள், நில அளவைத் திணைகள அதிகாரிகள்   ஆகியோருடன் பெளத்த கடும்போக்காளர்கள் , கடுகஹவத்த உயன்வத்த ஊர் பிரதிநிதிகளும், பள்ளிவாயல் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் .

இக் கூட்டத்தின் போது 2006 ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணியின் 6 அடி பிரதேசமும் தெவனகல குன்றில்லிருந்து 400 மிட்டர் நிலப்பரப்பு தெவனகல புனித பூமி வலையமாக அளப்பதத்கும் முடிவு எடுக்கப்படுள்ளது.மீண்டும் டிசம்பர்  மாதம் 23 ஆம் திகதி நில அளவைத் திணைகள அதிகாரிகள் குறித்த இடத்துகு வருவதாக இக்கூட்டத்தின் போது முடிவு எடுக்கப்பட்டள்ளது. இதற்கு முன் தீர்மானம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றினை தொல்பொருளியல் திணைகளத்தினால் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது .

அதேவேளை தெவனகலை புனித பூமியை பாதுகாக்கும் அமைப்பு மற்றும் அங்கு வந்திருந்த இனவாத கடும்போக்காளர்கள்  இத் தீர்மானங்கள் தொடர்பில் திருப்தி படாது   முஸ்லிம்களை அப்பிரதேசத்தில் இருந்து  முழுமையாக வெளியேற்றுவதை நோக்கமாக கொண்டிருந்தார் என்று தெரிவிக்கப் படுகிறது . அதேவேளை முஸ்லிம்கள் தரப்பிலும் இந்த தீர்மானம் தொடர்பில் உடன்பாடு  தெரிவிக்கப் படவில்லை .

இதை தொடர்ந்து இது   தொடர்பாக 5ஆம்  திகதி   இரவு கடுகஹவாத்த ஜும்ஆ    மஸ்ஜித்தில்  விஷேட கூட்டம் நடைபெற்றுள்ளது . இக்கூட்டத்தில் பொது மக்களின் காணிகளுக்குள் அனுமதியில்லாமல் எந்த அதிகாரியோ அல்லது   இனவாதிகளே நுழைய  அனுமதிககப்படமாட்டாது. பொது மக்களுக்கு சொந்தமான காணியின் 6 அடியல்ல ஒரு அடியேனும் விட்டுக்கொடுக்கப் படமாட்டாது என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது .இதேவேளை இந்த பிரச்சினையை சட்டரீதியாகத்தான் தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்ட்டுள்ள நிலையில் பெளத்த கடும்போக்கு வாதிகளின் நடவடிகைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் சிலர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்  என்று அறிய முடிகிறது .

அதேவேளை இந்த பிரச்சினை தொடர்பாக கருத்துரைத்துள்ள  மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி . தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் கேகாலை தெவனகலைப் பகுதியிலுள்ள முஸ்லிம்களின் விடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது தற்போது கேகாலை மாவட்டத்தில் தெவனகல பிரதேசத்தில் ஒரு புதிய பிரச்சினை எழுந்துள்ளது. அங்குள்ள ஒரு இடத்தில் தொல்பொருள்கள் கண்டு எடுக்கப்பட்டதாக கூறி மேலதிக அகழ்வு ஆராய்ச்சிக்காக நில ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சிகள் மேட்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த உத்தேச ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் முஸ்லிம் குடியிருப்புகளும் பள்ளிவாசல்களும் அமைந்துள்ளன. இங்கு சென்ற அநுராதாபுரத்தைச் சேர்ந்த பெளத்த தேரர் ஒருவர் இந்த அகழ்வு ஆராய்ச்சி பிரதேசம் விஸ்தரிக்கப்பட்டு அங்குள்ள முஸ்லிம் விடுகள், பள்ளிவாசல்கள் எல்லாமே தரைமட்டமாக்கப்பட வேண்டு என பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளார்.

அநுராதாபுரத்தில் முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களை அழித்தவன் நானே. கேகாலையிலும் அதை செய்தே தீருவேன் என்று அவர் சபதம் இட்டுள்ளார். இந்தப் பகுதி மக்கள் தற்போது பெரும் அச்சத்துக்கும் நிம்மதியற்ற நிலைக்கும் ஆளாகியுள்ளனர். அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு விளைவுகள் மோசமடைவதத்கு முன் உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள ஒருவகை புதிய நோயாக தான் இதை பார்க்கவேண்டியுள்ளது. நாடு முழுவதும் சிறுபான்மையினர் செறிந்து வாழும் இடங்கள் குறி வைக்கப்பட்டு புதிய பிரச்சினைகள் அன்றாடம் தோற்றுவிக்கப்படுகின்றன. இந்த நோய்ற்கு காரணம் என்ன? மக்கள் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார் .

இந்த நிலையில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் மத்தியில் தமது இருப்பது தொடர்பில் பாரிய அச்ச உணர்வு ஏற்பட்டு வருகிறது .பெளத்த தீவிரவாதிகளின் பேச்சைக்  கேட்டு அரசு செயல்படுமா அல்லது நியாயமான தீர்வொன்றை அரசு முன்வைக்குமா என்ற எதிர்பார்ப்பில் முஸ்லிம்கள் உள்ளனர் . முஸ்லிம்கள் செறிவாகவும் பெரும்பான்மையாகவும்  இல்லாத பல பிரதேசங்களில்  பெளத்த கடும்போக்காளர்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக முஸ்லிம்கள் உணர்கின்றார்கள் என்பது நோக்கத்தக்கது.(lm)

Web Design by Srilanka Muslims Web Team