தெஹிவளை கடவத்தை பள்ளிவாசலை மூட உத்தரவு - Sri Lanka Muslim

தெஹிவளை கடவத்தை பள்ளிவாசலை மூட உத்தரவு

Contributors

 

-சஹீத் அஹமட்-

தெஹிவளை கடவத்தை வீதியில் கடந்த மூன்று வருடங்களாக அதிகாரபூர்வமாக  இயங்கி வரும் தாருல் ஷாபியா மஸ்ஜித்தை மூடி விட  தெஹிவளை பொலிசார் உத்தரவிட்டுள்ளனர்   என தெரிவிக்கப்படுகின்றது. மஸ்ஜித்தாகவும், மதரஸாவாகவும் இயங்கி வரும் மஸ்ஜித்   முஸ்லிம் சமய கலாசாரா திணைக்களம் ,வக்பு சபை ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில் பெளத்த சாசன அமைச்சின் அனுமதி வேண்டும் அந்த அனுமதியை பெரும் வரை குறித்த மஸ்ஜித்தை  மூடிவிடுமாறு பொலிசார் ”உத்தரவு ‘ பிறப்பித்ததாக நிர்வாகம் கூறுகிறது .

நாட்டில் மஸ்ஜித் ஒன்று அதிகாரபூர்வமாக இயங்குவதற்கு முஸ்லிம் சமய கலாசாரா திணைக்களம் ,வக்பு சபை ஆகிவற்றின் பதிவுகளை மேற்கொள்வதுதான் சட்ட அதிகாரத்தை வழங்கும் நடைமுறையாக இதுவரை பின்பற்றப் பட்டு வரும் நிலையில் அண்மையில் கல்கிசை  போலிஸ் நிலையத்தில் குறித்த மஸ்ஜித் நிர்வாகம் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் கல்கிசை பொலிஸ் அதியட்சகர் குறித்த மஸ்ஜிதுக்கு பெளத்த சாசன அமைச்சின் அனுமதி பெறும்வரை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளார் .

அதேவேளை இது தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று நேற்று மலை தெஹிவளை பிரதான  மஸ்ஜித்தில் இடம்பெற்றுள்ளது இதற்கு முஸ்லிம் நிறுவங்களில் பிரதிநிதிகள் அழைக்கப் பட்டிருந்தனர் .

அதே போன்று தற்போது இப்பள்ளி வாசலில் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஒன்று கூடியுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் மேற்கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Web Design by Srilanka Muslims Web Team