தெஹிவளை பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் சந்தேகிக்கும் படி யாரும் இல்லை - Sri Lanka Muslim

தெஹிவளை பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் சந்தேகிக்கும் படி யாரும் இல்லை

Contributors

-சஹீத் அஹ்மட்-

தெஹிவளை கொஹுவலை மஸ்ஜிதுல் தாருல் ஸாபி  மீது  தாக்குதல் நடத்தியவர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் . கொஹுவலை பொலிஸ் நிலையத்தின் இரு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளைநடாத்திவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது .

கைத் தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன்  சம்பவம் தொடர்பிலான சூத்திரதாரிகளை உடன் கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரியிருந்தார் .

அதேபோன்று  நாட்டின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஏற்கனவே தெஹிவளை பிரதேச மூன்று மஸ்ஜித்துக்களை மூடுமாறு பொலிசார் தெரிவித்தமை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தாகவும் இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்தப்படுமென்றும் ஜனாதிபதி அமைச்சர் ஹக்கீமிடம் உறுதியளித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

அதேவேளை மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் ஸாலி, மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான ஆகியோரும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டிருந்தனர்.

குறித்த பிரதேசத்தில்  மத குரு ஒருவர் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதாக மஸ்ஜித்துக்களின் நிர்வாகிகள் அமைச்சர் ஷாத் பதியுத்தீனிடம் முறையிட்டிருந்தனர் என்பது சுட்டிக் காட்டத்தக்கது .

நாட்டில் மிக சிறுபான்மையான முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டு வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக அரசாங்கம் பாதுகாப்பு உத்தரவாதத்தை அதன் நடவடிக்கைகள் மூலமாக முஸ்லிம் சமூகத்துக்கு வழங்க வேண்டும் என்று எதிர்பார்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team