தேசிய மீலாதுன் நபி விழா பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தில்..!  - Sri Lanka Muslim

தேசிய மீலாதுன் நபி விழா பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தில்..! 

Contributors

இவ்வருடத்திற்கான (2022) தேசிய மீலாதுன் நபி விழா பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீட மாநாட்டு மண்டபத்தில், எதிர்வரும் 09ஆம் திகதி நடைபெறவுள்ளதாக, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் அல்ஹாஜ் இப்றாஹீம் அன்ஸார் தெரிவித்தார்.

சீனன்கோட்டை பள்ளிச்சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் தனவந்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடனான விசேட சந்திப்பு, இன்று (01) சீனன்கோட்டை பாஸிய்யா ஜும்ஆ பள்ளிவாசலில், திணைக்கள பணிப்பாளர் இப்றாஹீம் அன்ஸார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் இறுதியில் அனைவரினதும் ஏகோபித்த முடிவுகளின் பிரகாரம், இவ்வருடத்திற்கான மீலாத் நிகழ்வுகள் ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தில் நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.

திணைக்களப்பணிப்பாளர் இப்றாஹீம் அன்ஸார் தலைமையில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் விழாவில், பிரதம அதிதியாக மாண்புமிகு பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

கௌரவ அதிதியாக கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கலந்துகொள்வார்.

விசேட அதிதிகளாக வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மர்ஜான் பளீல், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் உட்பட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பள்ளிச்சங்க உறுப்பினர்கள், நளீமிய்யா கலாபீட நிர்வாகிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளதாக, கலாசார திணைக்கள அதிகாரி ஷெய்க் முப்தி முர்ஸி தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team