தேர்தல்களின் போது வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க யோசனை - Sri Lanka Muslim

தேர்தல்களின் போது வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க யோசனை

Contributors

தேர்தல்களின் போது வாக்களிக்கத் தவறும் நபர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கும் யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா ரவி கருணாநாயக்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் இந்த யோசனை உத்தேச சட்ட மூலமாக சமர்ப்பிக்கப்பட உள்ளது.

வாக்காளர இடாப்பில் பெயர் பதியப்பட்டு தேர்தல்களின் போது வாக்களிக்கத் தவறும் நபர்களுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

18 வயதுக்கும் மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் அந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கே தற்போது வாக்குரிமை காணப்படுகின்றது.

வாக்களிக்கத் தவறும் நபர்களிடமிருந்து எவ்வளவு தொகை அறவீடு செய்யப்பட வேண்டும் என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.lw

Web Design by Srilanka Muslims Web Team