தேர்தல் தொடர்பில் புதிய வியூகம் ஒன்றை தேடும் அரசு - கயந்த » Sri Lanka Muslim

தேர்தல் தொடர்பில் புதிய வியூகம் ஒன்றை தேடும் அரசு – கயந்த

Contributors

qout9

அரசாங்கம் தற்போது தேர்தல் தொடர்பில் புதிய வியூகம் ஒன்றை தேடிவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன் ரயிலின் பெட்டிகள் கழன்று வருவதைப் போல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ளவர்கள் பிரிந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் கூட்டமைப்பின் சில வேட்பாளர்கள் முதலமைச்சர்களாக செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க கட்சியின் வேட்பாளர்கள் சிலர் தேர்தல் சட்டங்களை மீறுவதாக கூறிய கயந்த கருணாதிலக்க மக்களிடம் இருந்து எவ்வகையிலாவது வாக்குகளைப் பெற்று விடலாம் என இவர்கள் எண்ணிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். (ad)

Web Design by Srilanka Muslims Web Team