'தேர்தல் நடத்தப்படுவதனை சீர்குலைப்பதற்கான சூழ்ச்சி; தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாடு கிடையாது' - பெப்ரல்! - Sri Lanka Muslim

‘தேர்தல் நடத்தப்படுவதனை சீர்குலைப்பதற்கான சூழ்ச்சி; தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாடு கிடையாது’ – பெப்ரல்!

Contributors

தேசிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாடு கிடையாது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மத்தியில் முரண்பாடு நிலவி வருவதாக சிலர் குற்றம் சுமத்தி வரும் போதிலும், உறுப்பினர்கள் மத்தியில் அவ்வாறான முரண்பாட்டு நிலைமைகள் தென்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்து கொண்டிருந்தாலும் அது தேர்தல் அறிவிப்பினை பாதிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்படுவதனை சீர்குலைப்பதற்கு ஒரு சில தரப்பினர் சூழ்ச்சி செய்யும் முயற்சிகளை அவதானிக்க முடிவதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு என்பது சுயாதீன ஓர் அமைப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team