தேர்தல் மேடைகளில் ரவூப் ஹக்கீம் மீது சுமத்தப்படுகின்ற விபச்சார குற்றச்சாட்டானது (video) - Sri Lanka Muslim

தேர்தல் மேடைகளில் ரவூப் ஹக்கீம் மீது சுமத்தப்படுகின்ற விபச்சார குற்றச்சாட்டானது (video)

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

வீடியோ


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையான ரவூப் ஹக்கீம் மீது சகல அரசியல் மேடைகளிலும் சுமர்த்தப்படுகின்ற, விமர்சிக்கப்படுகின்ற விபச்சாரம் சம்பந்தமான குற்றச்சாட்டானது சரியாக இஸ்லாமிய அறிவு இல்லாதவர்களினால் சாட்டப்படுகின்ற குற்றச்சாட்டு என்பதனை முதலில் சமூகம் விளங்கிகொள்ள வேண்டும்.

ஏன் என்றால் ஒரு மனிதனின் மீது விபச்சாரம் சம்பந்தமான குற்றச்சாட்டினை சுமத்துகின்ற பொழுது இஸ்லாமிய மார்க்க சட்டதிட்டங்கள் எவ்வாறான விதி முறைகளை கையாளுமாறு காட்டித்தந்துள்ளது என்பதனை அலசி ஆராய்ந்து அதற்கு பிற்பாடே அவருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்தோடு முக்கியமாக இவ்விடயத்தினை பார்க்கின்ற பொழுது நாம் அனைவரும் முஸ்லிம்கள். உண்மையில் ஒருவர் இவ்வாறான குற்றத்தினை செய்கிற பொழுது அதனை நாலு நபர்களுக்கு தெரியாமல் மறைப்பதே இஸ்லாம் எமக்கு காட்டித்தந்துள்ள பன்பாகும். ஆனால் அதற்கு மாற்றமாக கட்சியினை மாசு படுத்துவதற்காகவும், தலைவரை இழிவாக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே செய்யாத ஒரு விடயத்தினை இவ்வாறு அரசியல் சுயலாபங்களுக்காக விமர்சித்துக்கு கொண்டும், அதனை அரசியல் ஆயுதமாகவும் தூக்கிபிடிக்கின்றார்கள்.

இவற்றை எல்லாம் பார்க்கின்ற பொழுது… எல்லாவற்றினையும் கட்சியின் தலைமையினை வைத்துக்கொண்டு அனுபவித்தற்கு பிற்பாடு தாங்கள் சாப்பிட்ட தட்டினுல் மலம் கழிக்கும் செயலினை போன்ற அருவருக்கதக செயலாகவே நான் இவற்றினை பார்கின்றேன் என சம்மாந்துறை பிரதேச சபைக்காக இரண்டாம் வட்டாரத்தில் போட்டியிடும் மெளலவி றம்சீன் காரியப்பர் தெரிவிக்கின்றார்.

மேலும் றம்சீன் காரியப்பர் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய விரிவான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவெற்றம் செய்யப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team