
தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலும் , சுற்று நிருபத்தின் அடிப்படையிலுமே அடக்கலாம் என்று வர்த்தமானி கூறுகிறது.இதன் பின்னனி என்ன?
● *கொரோனா தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கையிலே வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என அமைச்சர் சுதர்சனி தெரிவித்துள்ளார்.*
● *பல இடங்களிலே தொற்று பரவாதிருக்க தடுப்பூசிகளும் ஏற்றப்படுகின்றன.*
● *நுவரெலியா நகரம் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டிருக்கிறது.*
இந்த விடயங்களையெல்லாம் வைத்து பார்க்கின்ற போது , கொரோனா மரணங்களும் இனி வீழ்ச்சியடையும் வாய்ப்பே இருக்கிறது.
சொற்பமானவர்களே மரணிக்க கூடும்.
இந்த விடயங்களோடு சேர்த்து , சர்வதேச விவகாரங்களையும் வைத்தே அரசு மரணிப்போரை அடக்கலாம் எனும் தகவலை வெளியிட்டுள்ளது என்பதே உண்மை.
இந்த அறிவிப்பும் கூட , மரணித்தோரே உடனே அடக்க முடியுமானதாக இல்லை.
*தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலும் , சுற்று நிருபத்தின் அடிப்படையிலுமே அடக்கலாம் என்றே வர்த்தமானி கூறுகிறது.*
அப்படியானால் *சுற்று நிருபம் எப்போது வரும் ?*
*தேர்ந்தெடுக்கப்படும் இடம் எது?*
என்கின்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்க இன்னும் நாளெடுக்கும்.
அது வரை மரணிப்போரை பிணவறையில் அப்படியே வைக்க போகிறார்களா ?
தங்கள் உறவுகளை பிணவறையிலே வைத்து விட்டு அவர்களது உறவுகளால் வீட்டிலே நிம்மதியாக இருக்க முடியுமா ?
இதற்கெல்லாம் பதில் வருவதற்குள் கொரோனா முழுமையாக இல்லாது போகக்கூடும்.
கடந்த மார்ச்சிலே முதலாவது ஜனாசா எரிக்கப்பட்டது.
தற்போது ஒரு வருடமும் நெருங்குகிறது.
இந்த ஒரு வருட காலத்திற்குள் தான் , தேர்தலும் வந்தது.
நம்மவர்களும் அரசை பேசி பேசி வாக்கு சேர்த்தனர்.
*வென்றதன் பின்பு ஜனாசா எரிக்கும் அரசோடேயே சேர்ந்தும் கொண்டனர்.*
ஆனால் , அரசு ஜனாசா எரிக்க மாட்டோம் என்று சொன்னால் மாத்திரமே துள்ளி குதிப்பார்கள்.
நாம் தான் முடிவெடுத்தோம் என்பார்கள்.
மக்களும் பழையதையெல்லாம் மறந்து போவார்கள்.
மக்களே !
நாமே தீர்வு பெற்று தந்தோம் என்று சொல்லும் இவர்களிடமும் , இவர்களின் வாலுகளிடமும் கேள்விகளை கேளுங்கள்.
*எந்த இடம் அடக்குவதற்கு அடையாளம் காணப்பட்டது என கேளுங்கள்.?*
*சுற்று நிருபம் எங்கே என கேளுங்கள்.?*
*அடக்கம் ஆரம்பிக்க எவ்வளவு காலமெடுக்கும் என கேளுங்கள்.*
*நோய்கள் குறையும் தறுவாயிலே ஏன் உரிமை கோருகிறீர்கள் என கேளுங்கள்.*
*அரசோடு சேர்வதற்கு முன்னர் செய்த ஒப்பந்தத்தின் பிரதிகள் எங்கே என கேளுங்கள்.*
*முழு பூசணிக்காயை ஏன் சோற்றிலே மறைக்கிறீர்கள் என கேளுங்கள்.*
*மக்களின் விடயங்களை , மக்களுக்கு தெரியாமல் பேசுகிறோம் என்று சொல்வதற்கு காரணமென்ன ? என கேளுங்கள்.*
எல்லாவற்றிற்கும் மேலாக , இது வரைக்கும் எரிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300 ற்கு மேல் என்பதை மனதில் வையுங்கள்.
இதன் பின்னர் மரணிப்போரை புதைத்தாலும் கூட , அப்படி புதைக்கப்படும் நம்மவர்களது ஜனாசாக்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும் கணக்கெடுங்கள்.
மரணங்கள் வீழ்ச்சியடையும் நேரமல்லவா இது ?
எதையும் மேலோட்டமாய் பார்த்து , அனைத்தையும் மறந்து போகாதீர்கள்.
ஆழமாக நோக்கி , மனதிலே பதிந்து வையுங்கள்.
செய்த துரோகத்தை மறைக்க பணத்தை இறைப்பார்கள்.
அபிவிருத்தி படம் காட்டுவார்கள்.
சிறப்பாக நடிப்பார்கள்.
புத்திசாலித்தனமாய் சிந்தியுங்கள்.!!
Average Rating