தொலைக்காட்சி சரிந்து விழுந்து சிறுமி மரணம் - Sri Lanka Muslim

தொலைக்காட்சி சரிந்து விழுந்து சிறுமி மரணம்

Contributors

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி மீது தொலைக்காட்சிப்பெட்டியுடன் அதன் நிறுத்தி சரிந்து விழுந்ததினால் அச்சிறுமி மரணமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியகல்லாறில் இன்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெரியகல்லாறைச் சேர்ந்த என்.ஆரக்ஷியா (வயது 4) என்ற சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்த இச்சிறுமி மீது தொலைக்காட்சிப்பெட்டியுடன் அதன் நிறுத்தி சரிந்து விழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக கல்லாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இச்சிறுமி, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team