தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க சவூதி துரித நடவடிக்கை - Sri Lanka Muslim

தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க சவூதி துரித நடவடிக்கை

Contributors
author image

Editorial Team

சவுதியில் வீட்டு வேலை மற்றும் கம்பெனி வேலை சம்மந்தப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பல்வேறுபட்ட பிரச்சினையை தினமும் சந்திக்கிறார் இந்த பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர சவுதி தொழில் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி:
வீட்டு வேலையில் சம்பளம் மற்றும் பிற பிரச்சினைகள் மூலம் தொடரப்பட்ட வழக்குகள் 5 நாட்களில் அவருடைய sponsor முன்நிலையில் பேச்சுவார்த்தை மூலமாகவும் அப்படி வழக்கு முடியவில்லை என்றால் வழக்கு பதிவு செய்யபட்டு நீதிமன்றத்தில் நீதிபதி முன்நிலையில் 10 நாட்களில் நீதிபதி ஒருதலைப்பட்சமாக தொழிலாளிக்கு தீர்ப்பு வழங்கும்.

மற்ற கம்பெனி சம்மந்தமான வழக்குகளில் நாட்களில் sponsor முன்நிலையிலும் அதில் உடன்பாடு எட்டவில்லை எனில் வழக்கு fileயில் எடுத்து கொள்ளபட்டு 21 நாட்களில் தீர்ப்பு வழங்கப்படும். இப்படி பிரச்சினை உள்ளவர்கள் உள்நாட்டினர் வேலை பார்க்கும் சில இடங்களை தவிர மற்ற இடங்களில் வேலைக்கு சேர்ந்து கொள்ளலாம்.

அரசின் இந்த முடிவு முலமாக வீட்டு வேலை மற்றும் சாதாரண இடங்களில் வேலை பார்க்கும் நபர்களும் வேற துறைகளில் வேலைக்கு சேர்ந்கொள்ள முடியும். இது தமிழர்கள் உட்பட அனைத்து இந்தியர்களுக்கும உதவியாக இருக்கும்.

தகவல் : குவைத் தமிழ் பசங்க

Web Design by Srilanka Muslims Web Team