த.தே.கூ தலைவரைப் பார்த்து மக்கள் புலம்பல் - Sri Lanka Muslim

த.தே.கூ தலைவரைப் பார்த்து மக்கள் புலம்பல்

Contributors

கடந்த 15ம் திகதி பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது, அவரை யாழ்.பொதுநூலகத்தில் சந்தித்து விட்டு தனது காரில் வெளியேறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கார் கதவை திறந்து அவரை இறங்கடா வெளியே என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கத்தியதுடன் அவர் மீது சிலர் கைகளால் குத்தியுள்ளனர்.

கமருனை சந்திப்பதற்கு ஏற்பாட்டை செய்யாது தான் மட்டும் சந்தித்து விட்டு சென்றதாலேயே காணாமல் போனவர்களின் உறவினர்கள் சம்பந்தன் மீது ஆத்திரம் கொண்டு அவரை தாக்க முற்பட்டனர்.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் மீது காவல்துறையினர் தாக்கியதைப்பற்றி கவலைப்படாது சொகுசாக காரில் ஏறிச்சென்ற சம்பந்தன் மீது மக்கள் ஆத்திரம் கொண்டு திட்டித்தீர்த்தனர்.  மக்களோடு மக்களாக நின்று அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டிய சம்பந்தன் காரில் தப்பி ஓடும் நிலைக்கு வந்தது ஏன்?(tti)

 

Web Design by Srilanka Muslims Web Team