நசீர் அஹமதுடன் எகிப்து தூதுவர் சந்திப்பு! - Sri Lanka Muslim

நசீர் அஹமதுடன் எகிப்து தூதுவர் சந்திப்பு!

Contributors

இலங்கைக்கான எகிப்து தூதுவர் மேஜட் மொஸ்லிஹ் சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட்டை நேற்று (06) சந்தித்தார்.

நவம்பர் (06) முதல் (18) வரை எகிப்தில் நடைபெறவுள்ள காலநிலை மாநாட்டில் கலந்துகொள் ளுமாறு அழைப்புவிடுத்த தூதுவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாநாடு COP27 பற்றியும் இச்சந்திப்பில் இவ்விருவரும் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் அமைச்சரின் ஆலோசகரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கருணாசேன ஹெட்டியாராய்ச்சி மற்றும் அமைச்சின் முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team