நடப்பாண்டு விபத்தில் மூவாயிரம் பேர் பலி - பொலிஸ் திணைக்களம் தகவல் - Sri Lanka Muslim

நடப்பாண்டு விபத்தில் மூவாயிரம் பேர் பலி – பொலிஸ் திணைக்களம் தகவல்

Contributors

நடப்பாண்டில் இதுவரை சுமார் 32 ஆயிரம் வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும்
அதில் மூவாயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது .
குறிப்பாக வாகன சாரதிகள் போக்குவரத்து வீதி ஒழுங்குகளை முறையாக பின்பற்றாமையினாலே விபத்துகள் தற்போது அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார் .
மேலும் , போக்குவரத்தில் ஈடுபடுகின்ற சாரதிகள் பல நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற உணர்வுடன் வாகனங்களை செலுத்த வேண்டும் . அத்துடன் வாகனங்களை செலுத்தும்போது பாதையின் தன்மை , காலநிலை மற்றும் வேகம் போன்ற காரணிகள் குறித்து நன்குணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார் .

Web Design by Srilanka Muslims Web Team