நடிகர் சஞ்சய் தத்துக்கு தண்டனைக் குறைப்பு? - மாநில அரசுடன் உள்துறை அமைச்சு ஆலோசனை. - Sri Lanka Muslim

நடிகர் சஞ்சய் தத்துக்கு தண்டனைக் குறைப்பு? – மாநில அரசுடன் உள்துறை அமைச்சு ஆலோசனை.

Contributors

நடிகர் சஞ்சய் தத்தின் சிறை தண்டனையை குறைப்பது தொடர்பாக மகாராஷ்டிரா அரசிடம் உள்துறை அமைச்சகம் கருத்து கேட்டுள்ளது. மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆயுதங்களில் இரு துப்பாக்கிகளை சஞ்சய்தத் வைத்திருந்தார். இந்த குற்றத்துக்காக 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின் 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

அவர் தண்டனையை புனேவில் உள்ள யரவாடா சிறையில் அனுபவித்து வருகிறார். தற்போது மருத்துவ காரணங்களுக்காக 14 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய சஞ்சய் தத், 70 வயது மூதாட்டி உட்பட மூன்று பேருக்கு மருத்துவ காரணங்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் தண்டனை குறைப்பு அளிக்க வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு மனு அளித்திருந்தார்.

அதை உள்துறை அமைச்சகத்துக்கு பிரணாப் அனுப்பி வைத்தார். இந்த மனு குறித்து கருத்து தெரிவிக்கும்படி மகாராஷ்டிரா அரசை, உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. மகாராஷ்டிரா அரசின் பரிந்துரை ஜனாதிபதி பிரணாப்புக்கு அனுப்பி வைக்கப்படும்.

Web Design by Srilanka Muslims Web Team