நவவி MPயுடன் விசேட நேர்காணல் » Sri Lanka Muslim

நவவி MPயுடன் விசேட நேர்காணல்

navavi

Contributors
author image

Irshad Rahumadullah

( நேர் கண்டவர்- தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா)

கேள்வி – புத்தளம் மாவட்டத்தின் அரசியல் செயற்பாடுகளில் மிகவும் வேகமாக செயற்பட்டுவரும் நீங்கள் முதன் முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய படடியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். இது தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில் – அல்ஹம்துலில்லாஹ் புகழ் அனைத்தும் அல்லாவுக்கே என்று கூறுவது இறைவனின் நாட்டம் இல்லாமல் எதுவும் இடம் பெறாது என்ற ஆழ்ந்த நம்பிக்கையினை நாம் கொண்டுள்ளோம். அடுத்த கட்டமாக எனது நன்றிக்குரியவர் எனது கட்சியின் தலைவரும், அமைச்சருமான சகோதரர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு ,ஏனெனில் மன்னார் மற்றும் புத்தளம் மாவட்ட மக்களுக்கு இடையில் உள்ள உறவு 1990 ஆம் ஆண்டுக்கு பின்னரான இடம் பெயர்வு மட்டுமல்ல, அதற்கு முன்னர் இரு மாவட்ட மக்களுக்குமிடையில் காணப்பட்ட வர்த்தக ரீதியான உறவுகளையும் நாம் சேர்த்தே பார்க்கின்றோம்.

குறிப்பாக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் ஸ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய குழுவின் உறுப்பினராக இருக்கின்ற காலத்தில் இருந்து நான் நன்கு அறிவேன். வேகமும்,விவேகமும் சமூக பற்றுமிக்க ஒருவராகவே இருந்துவந்துள்ளார் என்பதை நான் கூறவிரும்புகின்றேன். இது மட்டுமல்லாது அன்று யுத்தம் நிறைந்த காலத்தில் கூட வடக்கு மக்களின் தேவைப்பாடுகள்
மற்றும் பாதுகாப்பு தொடர்பில் எம்முடன் பேசி ஒருவரும் ஒருவராக அமைச்சர் றிசாத் பதியுதீன் இருந்தார்.

1990 அம் ஆண்டு வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 90 சதவீதமானவர்கள் புத்தளத்துக்கே வந்தார்கள். இவ்வாறு வருகைத்தந்த மக்களை அன்றைய அமைச்சர் அஸ்வர் அவர்களின் தலைமையில் நானும், மர்ஹூம் பிஸ்ருல் ஹாபி மற்றும் டாக்டர் இல்யாஸ் ஆகிய அரசியல்வாதிகளுமே இவர்களை கரம் கொடுத்து தேவையானதை பெற்றுக்கொடுக்க முன்னின்று உழைத்தோம். அது போல் ஏனைய அமைப்புக்கள் மற்றும் புத்தளத்து மக்கள் செய்த தியாகங்களை நான் இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமானதாகும்.

கேள்வி – வில்பத்து விவகாரத்துடன் தொடர்பு படுத்தி முசலி பிரதேச மக்களை பேசுகின்றார்களே,இதில் எந்தளவு உண்மைத்தன்மை இருக்கின்றது?

பதில் – நல்லதொரு கேள்வி இதில் தான் மக்கள் தெளிவினை பெற வேண்டியுள்ளது.வில்பத்து சரணாயலம் என்பது மன்னாருக்கு எவ்விதத்திலும் தொடர்பினை கொண்டிருக்கவில்லை.அது புத்தளம் மட்டும் அநுராதபுரம் மாவட்டங்களுடன் தொடர்புபட்ட பிரதேசமாகும்.

இதை தெரிந்து கொள்ளாதவர்களே விடயங்களை சோடித்து மக்களை பிழையாக வழி நடத்திவருகின்றனர்.இதற்கு சில வங்கரோத்து அரசியல்வாதிகளும் எரிகின்ற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற நிலையில் செய்றபடுவதை அறிய முடிகின்றது. ஒரு சமூகம் தமது
வாழ்விடங்களை இழந்துவிட்டால் அவர்களுக்கு எதிர்காலம் இல்லை என்பது உண்மை.இதை இன்று நாங்கள் முசலி மக்களின் வாழ்கையில் காணுகின்றோம்.

இது மிகவும் வேதனையாகும் என்னைப்பொறுத்த வரை அரசியலுக்கு அப்பால் சென்று இந்த
மக்களது உண்மையறிந்தவன் என்ற வகையில் முழுமையான மண் மீட்டு போராட்டத்தி்ற்கு நான் எந்த தடை வந்த போதும் ஆதரவு நல்குவேன். வடக்கு முஸ்லிம்கள் அவர்களது மீள்குடிறே்றத்திற்கு சென்ற போது எதிர் கொண்ட பிரச்சினை தொடர்பில் நன்கறிவேன்.குறிப்பாக பாராளுமன்ற
உறுப்பினராக வந்தது முதல் அவர்களது மீள்குடியேற்றம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பல முறை பேசியிருக்கின்றேன்.இது ஹன்சார்ட்டில் பதிவாகியுள்ளது.இது தொடர்பி்ல் சபாநாயகர் பிரதமர், ஜனாதிபதியினதும் மற்றும் உரிய அமைச்சக்களின் கவனத்திற்கு கொண்டும் சென்றுள்ளார்.

இந்த நிலையில் இந்த மக்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பேசவில்லையென்று பேசிவருவதாக அறிகின்றேன். இதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உண்டு என இவர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன். அதே வேளை எமது கட்சியின் தலைவர். அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இந்த பிரசேத்திற்கு சென்று வந்துள்ளேன். இது மடட்டுமல்லாது இந்த மக்களது இபபிரச்சினை தொடர்பில் சிவில அமைப்புக்கள், ஜமிய்யத்துல் உலமா,சர்வமத அமைப்புக்கள்,புத்தி ஜீவிகள்,அரசியல் தலைமைகள் என பல தரப்புக்களுடன் பல தெளிவுக் கூட்டங் நடத்தப்பட்டும்,சந்திப்புக்களும் இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்..

இப்படியாக இம்மக்களது நிலத்தை மீட்கும் போராட்டத்தினை பல வடிவங்களில் முன்னெடுத்துவருகின்றோம். அதே போல் ஜனாதிபதியின் செயலாளரை அண்மையில் சந்தித்து முசலி மக்களது காணிகள் சுவீகரிப்பு செய்யப்பட்டுள்ளது தொடர்பில் நேர்மையான செயற்பாட்டினை முன்னெடுத்து அதனை மீண்டும் அம்மக்களது கைகளில் கையளிக்க வேண்டும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் வேண்டுகோள் முன்வைத்தோம். அதற்கு அவர் இதனை ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக
உறுதியளித்தார். இந்த நிலையில் மாற்று அரசியல் கட்சியொன்று ஜனாதிபதி செயலாளரை சந்தித்து இதே வேண்டுகோளை விடுத்த போது இதே பதிலை அவர் வழங்கினார்.

முசலி பிரதேசத்திற்க்கு வனபரிபாலன அதிகாரிகள் பல நுாறு தடவைகள் வந்து போயுள்ளதால் மேலும் இது தொடர்பில் விளக்கமளிக்க தேவைகள் இல்லை என்பதால் இந்த வர்தமாணி அறிவித்தல் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பை தெளிவாக கூறிய போது,ஜனாதிபதியுடன் கலந்து பேசி தவறு இடம் பெற்றுள்ள இந்த வார்த்தமாணியினை திருத்துவதற்கு உறுதிமொழி வழங்கப்பட்டது.இவ்வாறான நிலையில் மீண்டும் அதிகாரிகளை முசலிக்கு அழைத்து செல்வதன் மூலம் எவ்விதமான தீர்மாணத்தினையும் இந்த அதிகரிகாரிகளினால் எடுக்க முடியாது
என்பதை நாங்கள் நன்கறிவோம்.அதிகாரிகளும் இதனை எம்மிடம் தெரிவிததுள்ளமை
குறிப்பிடப்பட வேண்டியது..

கேள்வி – முசலி பிரதேச செயலக கூட்டத்தில் குழப்பம் விளைவித்தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தெரிவித்துள்னரே ?

பதில் – இன்று 32 நாட்களாக இந்த மறிச்சுக்கட்டி உள்ளிட்ட கிராமக்கள் மேற்கொண்டுள்ள நில மீட்பு போராட்டத்தினை கொச்சைப்படுத்த சில முயற்சிகள் எடுக்கப்பட்டன.நான் ஒரு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்,அதுவும் எமது தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை தலைவைராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்,அதே போல் அமைச்சர் றிசாத் பதியுதீன் வன்னி மாவட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்.

ஆகவே இந்த வன்னி மக்களுக்கு எங்கு அநீதி இடம் பெறுகின்றதோ அங்கு எனது பிரசன்னம்
இருக்கும் இதனை எவராலும் தடுக்க முடியாது.அதே போல் தான் கடந்த 27 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் வரவுள்ளதால் முசலி பிரதேச செயலகத்தில் கூட்டம் ஒன்றினை எற்படுத்து மாறு முசலி பிரதேச செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டிருந்தது.அந்த தகவலுக்கு அமைய இது முசலி மக்களது நீ்ண்டகால பிரச்சினை என்பதால் நானும் இதில் கலந்து கொள்ள சென்ற போது,அங்கு ஜனாதிபதி செயலாளர் வருகைத்தந்திருக்கவில்லை.

இதனால் வழமையான முடிவெடுக்க முடியாத கூட்டமாகவே இது இருந்தது.அப்போது நான்
இங்கிருந்து வெளியேறினேன்.ஆனால் சிலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி குழப்பத்தை தோற்றுவித்தாக கூறுவது பொய்யானதாகும்.பிரதேச மக்களது பிரச்சினை தொடர்பில் அம்மக்களுடன் பேசாமல் வெறும் படம் காட்டும் வேளையினை செய்வது அநியாயமாகும்.

என்னை தொடர்புபடுத்தி எமது தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் இம்மக்களுக்கு செய்துவருகின்ற பணிகைள முடக்க இவர்கள் எடுக்கும் முயற்சியாகவே இந்த கூட்டத்ததை நான் கண்டேன்.இந்த கூட்டத்தில் மன்னார் மாவட்ட மக்கள் பிரதி நிதிகளோ,மாகாண சபை உறுப்பினர்களையோ காணமுடியவில்லை.அப்படியென்றால் இதன் நோக்கம் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

மக்களது இந்த நில மீட்பு போராட்டத்தை அற்ப சொற்ப அரசியல் லாபங்களுக்காக கொச்சைப்படுத்த வேண்டாம்,அது அவர்களது வாழ்வுரிமை என்பதை கூற விரும்புகின்றேன் .அதே வேளை எனது 35 வருட அரசியல் வாழ்வி்ல் எந்தவொரு கூட்டத்தையும் நான் குழப்பியதாக வரலாறும் இல்லை எதிர்காலத்தில் அவ்வாறான எந்தவொரு பணியினையும் செய்யப் போவதுமில்லை என்பதை பொய்யான பிரசாரங்களை மு்னனெடுக்கும் அன்பர்களுக்கு கூறிக் கொள்ளவிரும்புகின்றேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம் நவவி தெரிவித்தார்

Web Design by The Design Lanka