நாங்கள் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்தாலும், அனைத்துத் தீர்மானங்களையும் ஏற்கமுடியாது - திஸ்ஸவிதாரண..! - Sri Lanka Muslim

நாங்கள் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்தாலும், அனைத்துத் தீர்மானங்களையும் ஏற்கமுடியாது – திஸ்ஸவிதாரண..!

Contributors

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், எரிபொருள்களின் விலை அதிகரிப்புத் தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக  முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் நியாயமில்லை எனத் தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரன, அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்தாலும், அரசாங்கத்தின் அனைத்துத் தீர்மானங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், எரிபொருள்களின் விலை அதிகரிப்புத் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம், அரசாங்கத்தின் தீர்மானமெனவும் கூறிய அவர், எரிபொருள் விலை அதிகரிப்புத் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர், மேலும் தெரிவித்தார்.

ஆளுங்கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்தே அதிகளவான எம்.பிகள் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது உண்மை. ஆனால் அரசாங்கத்துக்குள் உள்ள ஏனைய கட்சிகளுக்கும் கௌரவமளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகத் தாம் இருந்தாலும், அரசாங்கமெடுக்கும் அனைத்துத் தீர்மானங்களுக்கும் தாம் உடன்படப்போவதில்லை எனவும் தெரிவித்த அவர், உதய கம்மன்பிலவுக்கு எதிரான சாகர காரியவத்தின் அறிக்கை, அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிக் கொள்கைகளுக்கு எதிரானதெனவும் அவர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team