நாடாளுமுன்ற உறுப்பினர்கள் தப்பிச் செல்லாதவாறு விமான நிலைய வாயில் முற்றுகை..! - Sri Lanka Muslim

நாடாளுமுன்ற உறுப்பினர்கள் தப்பிச் செல்லாதவாறு விமான நிலைய வாயில் முற்றுகை..!

Contributors

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டும் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், பண்டார நாயக்க சர்வதேச விமான நிலைய வாயில்களை இளைஞர்கள் கூட்டம் மறித்துள்ளனர்.

விமான நிலைய வாயிலை மேற்படி இளைஞர்கள் வாகனங்களுடன் முற்றுகையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்றைய தினம் ஜனாதிபதியின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ, தனது மனைவியுடன் நாட்டை விட்டும் தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களின் வீடுகள் மற்றும் காரியாலயங்களையும் பொதுமக்கள் தாக்கியும் தீ மூட்டியும் வருகின்றனர்.

இந்த நிலையில், ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முடியாதவாறு, பண்டாரநாயக்க விமான நிலையத்தின் வாயில் முற்றுகையிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team