'நாடு வங்குரோத்து நிலையை அடைய ஜே.வி.பியும் ஒரு காரணம்' - கபீர் ஹசிம்! - Sri Lanka Muslim

‘நாடு வங்குரோத்து நிலையை அடைய ஜே.வி.பியும் ஒரு காரணம்’ – கபீர் ஹசிம்!

Contributors

நாடு வங்குரோத்தடைய ராஜபக்‌ஷர்களும் அவர்களின் சகாக்களுமே காரணம். அதேபோல் 2004ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் ஜே.வி.பியும் ராஜபக்‌ஷவும் இணைந்து மக்களை ஏமாற்றியதன் விளைவாகவே நாடு வீழ்ச்சி கண்டது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசிம் தெரிவித்தார்.

அடுத்த வருட அரச வருமானத்தை நூற்றுக்கு 69 வீதமாக அதிகரித்துள்ளது. இதன் சுமையும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. நாடு அந்த அளவுக்கு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைவதற்கான காரணத்தை விஞ்ஞான   ரீதியில் ஆராய்ந்து அறிக்கையிட்டுள்ள பொருளாதார நிபுணர்களின் கூற்றின் பிரகாரம் 2004க்கு பின்னரே இந்த பிரச்சினை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதன் பிரகாரம் மஹிந்த ராஜபக்‌ஷ, கோட்டாபயராஜபக்‌ஷ, பசில் ராஜபக்‌ஷ, பி,பி, ஜயசுந்தர, நிவாட் கப்ரால் ஆகியோரே பொருளாதார கொலையாளிகள் என்றே எமக்கு கூறவேண்டி ஏற்படுகின்றது.

அதேபோன்று கடன் வட்டி செலுத்துவதற்கு அரச வருமானத்தில் நூற்றுக்கு 72வீதம் செலுத்தவேண்டி இருந்தது என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team