நாட்டில் அடுத்தகட்ட போராட்டம் இரத்தக்களரியில் முடிவடையும் - மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை..! - Sri Lanka Muslim

நாட்டில் அடுத்தகட்ட போராட்டம் இரத்தக்களரியில் முடிவடையும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை..!

Contributors
author image

Editorial Team

நாட்டில் அடுத்தகட்ட போராட்டம் இரத்தக்களரியில் முடிவடையும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் விசேட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

‘நான் இந்த பதவியை ஏற்கும் போது டொலர் கையிருப்பு குறைந்தளவிலான நிலையில் இருந்தது. அதற்கு அப்போதைய அரசாங்கத்தின் சில செயற்பாடுகளே காரணமாகும்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணம் பெறச் சென்றபோதுஇ ​​இலங்கையின் கடனை மறுசீரமைக்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இருந்த போதிலும்இ அந்த நேரத்தில் அரசாங்கம் அவ்வாறு செய்ய மறுத்தமையினால் இலங்கைக்கு கடன் பணம் கிடைக்காமல் போனது. சமீபகால போராட்டத்தில் சில மோதல்கள் ஏற்பட்ட போதிலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

எனினும் எதிர்காலத்தில் பணவீக்க சூழல் ஏற்படக்கூடும் என்பதால்இ குறைந்த வருமானம் பெறும் மக்களே அதிக பாதிப்பை சந்திக்க நேரிடும். அதனால் மீண்டும் ஒரு போராட்டத்தை ஆரம்பித்தால் அது இரத்தக்களரியில் முடிவடைய அதிக வாய்ப்புகள் உள்ளது.

எனவே தற்போதைய சூழ்நிலையில் அவர்களைப் பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும்’ என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team