நாட்டில் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உணவே கையிருப்பில் உள்ளது - ஹெகலிய ரம்புக்வெல - Sri Lanka Muslim

நாட்டில் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உணவே கையிருப்பில் உள்ளது – ஹெகலிய ரம்புக்வெல

Contributors

நாட்டில் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உணவே கையிருப்பில் உள்ளது என கூறியிருக்கும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல, அதற்கு பின்னரான காலம் சவாலானது எனவும் கூறியிருக்கின்றார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடக சந்திப்பில், நாட்டின் உணவுக் கையிருப்பு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, உணவுக் கையிருப்பு தொடர்பாகக் கூறப்படும் விடயங்களில் ஒரு பகுதி சரியாக இருந்தாலும், அமைச்சரவை தொடர்ந்தும் அதுதொடர்பாக கவனம் செலுத்தி வருகின்றது.

நாட்டின் பிரதான வருமான வழிகள் தடைப்பட்டுள்ள நிலையிலும் அரசு உணவுக் கையிருப்பை நிர்வகிக்க முயற்சிக்கின்றது.

அரசு இன்னும் ஒரு மாதத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணையை செலுத்த வேண்டியுள்ள நிலையிலும், உணவுக் கையிருப்பு தொடர்பான சவாலைத் தீர்ப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team