நாட்டில் சில தொழிற்சாலைகளைக் கூட எதிர்காலத்தில் நடத்த முடியாத நிலை உருவாகலாம் - பந்துல குணவர்தன..! - Sri Lanka Muslim

நாட்டில் சில தொழிற்சாலைகளைக் கூட எதிர்காலத்தில் நடத்த முடியாத நிலை உருவாகலாம் – பந்துல குணவர்தன..!

Contributors
author image

Editorial Team

நாட்டில் சில தொழிற்சாலைகளைக் கூட நடத்த முடியாத நிலைமை உருவாகலாம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நாட்டில் எந்தப் பொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்பதை தன்னால் கூற முடியாது. சில மூலப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டால் நாட்டில் சில தொழிற்சாலைகளைக் கூட நடத்த முடியாத நிலைமை உருவாகலாம் என கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சீனா உலகில் உள்ள மிகப் பெரிய நாடுகளில் ஒன்று. ஐந்து நாட்கள் வேலை செய்யும் நாடு. ஒரு நாள் மாத்திரமே திறக்கப்படுமாயின் உலகில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். நாம் பெரும் பாலான மூலப் பொருட்களைச் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம். எமக்கு மூலப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால், எம்மால் சில தொழிற்சாலைகளை இயங்கச் செய்ய முடியாது. இதுதான் உலகில் தற்போதுள்ள புதிய சவால்.
உலகில் எரிபொருள் விலை அதிகரிப்பது இப்படித்தான், இலங்கை அதனை இப்படித்தான் கட்டுப்படுத்த வேண்டும் எனச் சிலர் கூறுவார்களாயின் அது செயல் முறை சாத்தியமற்றது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை 130 வீதமாக அதிகரித்துள்ளது. அந்த விலையைக் குறைக்கும் முறையை அறிந்தவர்கள் எவராவது இருந்தால் என்னைச் சந்திக்குமாறு கூறுங்கள் எனவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team