நாட்டு மக்களை மின்சாரக் கதிரையில் அமரச் செய்யும் வரவு-செலவுத் திட்டம். வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு எந்தத் திட்டமும் இல்லை.ரணில். - Sri Lanka Muslim

நாட்டு மக்களை மின்சாரக் கதிரையில் அமரச் செய்யும் வரவு-செலவுத் திட்டம். வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு எந்தத் திட்டமும் இல்லை.ரணில்.

Contributors

நாட்டின் 99 வீத­மான சாதா­ரண மக்­களின் மீது கடன் சுமை ஏற்றி வைக்­கப்­பட்­டி­ருக்­கின்ற நிலையில்
அவர்­களை மின்­சார கதி­ரையில் அமரச் செய்யும் வகையில் 2014 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்­டத்தை அர­சாங்கம் சமர்ப்­பித்­தி­ருக்­கின்­றது. இத்­த­கைய வரவு செல­வுத்­திட்­டத்தை ஐ.தே.க. எதிர்க்­கின்­றது என்று எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார். ஆறு எயார் பஸ்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­காக பிரித்­தா­னி­யா­வுடன் உடன் படிக்கை மேற்­கொள்­வதன் மூலம் அந்­நா ட்டுப் பிர­தமர்
பிர­தமர் கம­ரூனை சமா­ளித்து விடலாம் என்று அர­சாங்கம் நினைப்­ப­தா­கவும் அவர் கூறினார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை 2014 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்ட விவா­தத்தை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
ரணில் விக்­கி­ர­ம­சிங்க இங்கு மேலும் கூறு­கையில்,
அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் பிர­காரமே பாரா­ளு­மன்­றத்தில் வரவு செல­வுத்­திட்டம் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. அந்த வகையில் 2014 ஆம் ஆண்­டுக்­கான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­கத்தின் வரு­மானம் மற்றும் செல­வினம் என்ற அடிப்­ப­டை­யி­லான வரவு செலவுத் திட்­டமும் முன் வைக்­கப்­பட்­டுள்­ளது.
அர­சி­ய­ல­மைப்பின் 148 ஆவது சரத்து கூறு­கின்ற அடிப்­ப­டையில் அரச நிதி நிர்­வாகம் தொடர்­பான அனைத்துப் பொறுப்­புக்­களும் பாரா­ளு­மன்­றத்­துக்கே இருக்­கின்­றன.
எனினும் கடந்த கால நிலை­வ­ரங்­களை ஆராயும் பட்­சத்தில் இந்த பொறுப்­புக்கள் பாரா­ளு­மன்­றத்­துக்கு இருந்­துள்­ள­னவா என்­பது வருந்­தத்­தக்­க­தாகும்.
கடந்த பல வரு­டங்­களில் வரவு செல­வுத்­திட்­ட­மாக சமர்ப்­பிக்­கப்­பட்ட ஆவ­ணங்­களில் இருந்து முற்­றிலும் மாறு­பட்ட தன்­மை­யா­கவே அரச வரு­மா­னங்­களும் செல­வினங்­களும் இருந்­துள்­ளன என்­பது வெளிப்­ப­டை­யான உண்­மை­யாகும். இவற்­றோடு ஒப்­பி­டு­கையில் தற்­போது சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள வரவு செல­வுத்­திட்­டமும் உண்­மை­யான தன்­மை­க­ளோடு சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­பது தெரி­கின்­றது.
இம்­முறை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள வரவு செல­வுத்­திட்ட அறிக்கை 101 பந்­தி­களைக் கொண்­ட­தாக எழு­தப்­பட்­டி­ருக்­கின்ற போதிலும் நாட்டு மக்­க­ளுக்­கான நிவா­ரணம் எதுவும் இதில் பரிந்­து­ரைக்­கப்­ப­ட­வில்லை. வாழ்க்கைச் செல­வினைக் குறைப்­ப­தற்கு எந்த திட்­டமும் கிடை­யாது. அரச ஊழி­யர்­க­ளுக்­கான சம்­பளம் அதி­க­ரிக்­கப்­ப­ட­வில்லை.
ஆனால் விவ­சாய, கால்­நடை, நீர்ப்­பா­சனம், வன விலங்கு மற்றும் சுகா­தா­ரத்­து­றை­களில் பணி­யாற்றும் அதி­கா­ரி­க­ளுக்கு 5 வருட தவணை முறையில் சைக்கிள் வழங்­கு­வ­தற்கு யோசனை முன் வைக்­கப்­பட்­டுள்­ளது.
நாட்டை சுரண்டிக் கொண்­டி­ருப்போர் லம்போ­கினி பெரா­ரிபோன் அதி உயர் விலை கொண்ட வாக­னங்கள் தீர்வை வரி விலக்­க­ளிப்­புடன் தரு­வித்துக் கொள்ளும் நிலையில்தான் இம்­மா­தி­ரி­யான விட­யங்­களும் இடம் பெறு­கின்­றன. மேலும் லம்­போ­கினி காரிலும் தர­குப்­ப­ணங்­களை சுரண்டி பிழைப்பு நடத்­து­வோரும் உள்­ளனர். அது மாத்­தி­ர­மின்றி சைக்கிள்களிலும் தர­குப்­பணம் கறக்­கின்­றனர்.
2013 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டமும் மக்­க­ளுக்கு எந்த நிவா­ர­ணத்­தையும் வழங்­கி­யி­ருக்­க­வில்லை. எனினும் திடீ­ரென வரிகள் அதி­க­ரிக்­கப்­பட்­டன. இதனால் மின்­சாரக் கட்­ட­ணத்­துக்கு பாரிய அடி­வி­ழுந்­துள்ளது. இது போன்று எதிர்­வரும் ஜன­வரி மாதத்­திலும் வரி­களை அதி­க­ரிப்­ப­தற்­கான திட்­டங்கள் தயா­ராகிக் கொண்­டி­ருக்­கின்­றன.
பொது நல­வாய அரச தலை­வர்­க­ளது உச்சி மாநாடு என்ற திரு­மண வீட்டு விருந்­துக்­காக மக்கள் பணம் செலுத்த வேண்­டிய நிலை உரு­வா­கி­யுள்­ளது. இதனால் நாட்டு மக்­களின் வாழ்க்கை நிலை மேலும் கஷ்­டத்­துக்குள் தள்­ளப்­ப­டு­கின்­றது.
இந்­நி­லையில் கடந்த வியா­ழக்­கி­ழமை சமர்ப்­பிக்­கப்­பட்ட வரவு செல­வுத்­திட்­ட­மா­னது கடந்த வரு­டத்தின் போலியைப் போன்றே அமைந்­தி­ருக்­கின்­றது என்­பதை சுட்­டிக்­காட்டி கூற முடியும். அந்த வகையில் 2014 ஆம் ஆண்­டுக்­கான அர­சாங்­கத்தின் வரவு செலவுத் திட்­ட­மா­னது புஸ்­வா­ண­மா­கி­யுள்­ளது. இதில் நாட்டின் பொரு­ளா­தார நிலை­மையின் உண்­மைத்­தன்மை பிர­தி­ப­லிக்­க­வில்லை.
இது­போன்று தான் புள்ளி விப­ரங்­களும் முன்­மொ­ழி­வு­களும் நம்­பிக்­கை­யற்­ற­வை­யாக இருக்­கின்­றன. இவற்றை நம்ப முடி­யா­துள்­ளன. இத்­திட்­ட­மா­னது நாட்டு மக்­க­ளுக்கு எதி­ரா­ன­தாக அமைந்­துள்­ளது. எனவே இது மக்­க­ளையும் பாரா­ளு­மன்­றத்­தையும் ஏமாற்­று­கின்ற வெறும் போலி­யான வரவு – செல­வுத்­திட்­ட­மாகும்.
யுத்தம் நிறை­வுக்கு வந்த 2009 ஆம் ஆண்டின் பின்னர் பாது­காப்­புக்­கான நிதி குறைக்­கப்­பட்டு அந்த நிதி நாட்டின் அபி­வி­ருத்­திக்­கென பயன்­ப­டுத்­தப்­படும் என்று அர­சாங்கம் கூறி­யது. எனினும் பொரு­ளா­தா­ரத்தில் எந்­த­வித துரித வளர்ச்­சியும் இடம்­பெ­ற­வில்லை.
நாடு இன்று நாளுக்கு நாள் கடன் பொறிக்குள் சிக்­குண்டு வரு­வதைத் தவிர வேறு எந்த முன்­னேற்­றமும் இல்லை. கடன் பெறு­கை­யா­னது தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. அர­சாங்­கத்தின் நிதி நிர்­வாகம் இவ்­வாறு அதி­க­ரித்து வரும் அரச கடனில் தங்­கி­யி­ருப்­ப­துடன் வெளி­நாட்டு வர்த்­தக கடன்­களும் இவற்றில் அடங்­கு­கின்­றன.
2003ஆம் ஆண்டு ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் 1.86 ட்ரில்­லியன் ( ஒரு இலட்­சத்து 86 ஆயிரம் கோடி) ரூபா அரச கட­னா­கவும் 843 பில்­லியன் (84 ஆயி­ரத்து 300 கோடி) ரூபா வெளி­நாட்டு கட­னா­கவும் செலுத்த வேண்­டி­யி­ருந்­தது.
எனினும் 2008 ஆம் ஆண்டில் அரசு கடன் 3.58 ட்ரில்­லி­ய­னா­கவும் (மூன்று இலட்­சத்து 58 ஆயிரம் கோடி) வெளி­நாட்டு கடன் 1.44 ட்ரில்­லி­ய­னா­கவும் (ஒரு இலட்­சத்து 44 ஆயிரம் கோடி) ரூபா­வாக அதி­க­ரித்து பின்னர் 2013 ஆம் ஆண்டில் அரச கடன் 6.63 டிரில்­லி­ய­னா­கவும் ( ஆறு இலட்­சத்து 63 ஆயிரம் கோடி ரூபா) வெளி­நாட்டுக் கடன் மூன்று ட்ரில்­லி­ய­னா­கவும் (மூன்று இலட்சம் கோடி) அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது.
யுத்தம் நிறை­வ­டைந்­தி­ருக்­கின்ற போதும் செல­வினம் குறைந்து விட­வில்லை. அர­சாங்­க­மா­னது வெளி­நாட்டுக் கடன்­களை பெறு­வ­துடன் மாத்­திரம் நின்று விடாது அதி­க­ள­வி­லான வட்­டிக்கு வர்த்­தகக் கடன்­க­ளையும் பெற்று வரு­கின்­றது.
வெளி­நாட்டு தனியார் முத­லீட்­டா­ளர்­க­ளி­ட­மி­ருந்து அதிக வட்டி வீதத்தில் குறு­கிய கால அடிப்­ப­டையில் திறை­சேரி உண்­டி­யல்கள் மற்றும் பிணை முறி­களின் ஊடாக கடன்கள் பெறப்­ப­டு­கின்­றன. குறு­கிய காலத்தில் அதிக இலாபம் ஈட்­டு­வதே அத்­த­கைய வெளி­நாட்டு நிதி நிறு­வ­னங்­களின் பிர­தான நோக்­க­மாகும்.
மத்­திய வங்­கியின் அறிக்­கைக்கு அமை­வாக 80 பில்­லியன் ( 8 ஆயிரம் கோடி) ரூபா பெறு­ம­தி­யான திறை­சேரி உண்­டி­யல்­க­ளையும் 317 பில்­லியன் (31 ஆயி­ரத்து 700 கோடி) ரூபா பிணை முறி­க­ளையும் வெளி­நாட்டு தனியார் முத­லீட்­டா­ளர்கள் உரி­மை­யாக்கிக் கொள்­கின்­றனர்.
அந்த வகையில் நாட்டைக் காட்டிக் கொடுத்­தி­ருப்­பது யார் என்­பது தெளி­வா­கின்­றது.
அன்று டொன் ஜூவான் தர்­ம­பால அரசர் நாட்டை பகுதி பகு­தி­யாக போர்த்­துக்­கே­யர்­க­ளுக்கு காட்டிக் கொடுத்­தது போன்று எமது தேசிய கடனில் பகுதி பகு­தி­யாக வெளி­நாட்டு தனியார் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு காட்டிக் கொடுத்­துள்­ளனர்.
அரசு மென்­மேலும் வெளி­நாட்டு தனியார் முத­லீட்­டா­ளர்­க­ளி­ட­மி­ருந்து கடன் பெறு­வதில் தங்­கி­யி­ருப்­பதால் இதன் சத­வீதம் அடுத்­த­டுத்த வரு­டங்­களில் 50 சத­வீதம் வரை அதி­க­ரிக்கும் வாய்ப்­புள்­ளது. இத்­த­கைய நிலை­மையால் கிறீஸ் நாடு எதிர்­கொண்ட பொரு­ளா­தார நெருக்­க­டியைப் போன்று இலங்­கையும் எதிர் கொள்ளும் சாத்தியம் எழுந்துள்ளது.
வரு­மானம் ஈட்­டிக்­கொள்­வ­தற்கு எந்த திட்­டமும் இல்­லாத கார­ணத்தால் கடன்­களை செலுத்­து­வ­தற்­கென்று வரி­களை அதி­க­ரிப்­பதன் மூலம் வரு­மா­னத்தை ஈட்ட அரசு முற்­ப­டு­கின்­றது. இதனால் உழைக்கும் மக்­களின் குடும்­பங்கள் மீதே தாங்கிக் கொள்ள முடி­யாத அளவில் சுமைகள் ஏற்றி வைக்­கப்­பட்­டுள்­ளன.
கடந்த பல வரவு செல­வுத்­திட்­டங்­க­ளிலும் கூட குறைந்த வரு­மானம் பெறும் மக்­களின் வரு­மா­னத்தை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. அதே­போன்று தான் ஜனா­தி­ப­தியின் 9 ஆவது வரவு செல­வுத்­திட்­டமும் அமைந்­தி­ருக்­கின்­றது.
அர­சாங்­க­மா­னது வெளி­நாட்டுக் கடன்­களின் ஊடாக மனித வளங்கள் விவ­சாயம், கைத்­தொழில் போன்­ற­வற்றை அபி­வி­ருத்தி செய்­வ­தற்குப் பதி­லாக வீதி அபி­வி­ருத்­தி­க­ளையே மேற்­கொண்டு வரு­கின்­றது. கைத்­தொழில் உற்­பத்­தி­களை அபி­வி­ருத்தி செய்­யாது நெடுஞ்­சாலை, ரயில் பாதைகள், விமான நிலை­யங்கள் மற்றும் துறை­மு­கங்களை அபி­வி­ருத்தி செய்­வதில் எந்த பயனும் கிடை­யாது.
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் சேவை இலாபம் ஈட்­டா­தி­ருக்­கின்ற நிலையில் மிஹின் லங்கா சேவையின் நட்­டமும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மீதே சுமத்­தப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு கோடிக்­க­ணக்கில் நட்டம் ஏற்­பட்­டி­ருக்­கின்ற போது மேலும் ஆறு எயார் பஸ்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கும் ரோல்ஸ் ரொய்ஸ் இயந்­தி­ரங்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இதில் ரோல்ஸ் ரொய்ஸ் இயந்­திரம் கொள்­வ­னவு செய்­வ­தற்கு மட்டும் 800 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் கடன் பெறப்­பட்­டுள்­ளது.
பிரித்­தா­னிய நிறு­வ­னங்­க­ளுடன் இவ்­வாறு ஒப்­பந்­தங்­களை செய்து கொள்­வதன் மூலம் பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கம­ரூனை சமா­ளித்துக் கொள்ள முடியும் என்று அர­சாங்கம் எதிர்­பார்க்­கின்­றது.
பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமரூன் இலங்கை வந்து அவ­ருக்கு தேவை­யான விட­யங்­களை நிறைவு செய்து கொண்டு சென்று விட்டார்.
டேவிட் கம­ரூ­னி­னாலோ அல்­லது ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் ஒப்­பந்­தத்­தி­னாலோ இலங்­கைக்கு எந்த நன்­மையும் கிடைக்கப்போவதில்லை. ஒப்­பந்­தத்தின் தர­குப்­பணம் மூலம் சில­ரது பொக்­கட்­டுக்கள் நிரம்­புகின்றன. இதனால் ஏற்­பட்ட கடன் சுமை­க­ளையும் மக்­களே தாங்க வேண்­டி­யுள்­ளது.
நாட்டை சுரண்­டிப்­பி­ழைக்கும் ஒரு சத வீதத்­தி­னரின் சுமையை 99 சத­வீ­த­மான மக்கள் மீது சுமத்துவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை நாம் எதிர்க்கின்றோம். மக்கள் மீது ஏற்றி வைக்கப்படுகின்ற அனைத்து சுமைகளையும் வீழ்ச்சியடையச் செய்வதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
21 ஆம் நூற்றாண்டில் நாடு முன்னேற்றம் காண வேண்டுமெனில் நாட்டு மக்களை அறிவிலும் சுதந்திரத்திலும் பொருளாதாரத்திலும் பலப்படுத்த வேண்டியது அவசியமாகும். சமூக நியாயத்தை அடிப்படையாக கொண்டு சமூகப் பொருளாதாரத்தை நோக்கி பயணிக்க வேண்டும். டென்மார்க், ஜேர்மனி, சுவீடன், ஜப்பான் போன்ற நாடுகள் இந்த வழியிலேயே பயணிக்கின்றன.
மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் வரவு செலவுத்திட்டங்களை சமர்ப்பித்துள்ளது. ஆனால் உணரக்கூடிய வகையில் வருமானம் அதிகரிக்க வில்லை. அனைத்திலும் ஒரு சதவீதமானோர் செல்வந்தராயினர் 99 சதவீதமானோர் ஏழைகளாயினர். சாதாரண மக்களை மின்சார கதிரைக்கு அனுப்பும் வரவு செலவுத் திட்டமாகவே இது அமைந்துள்ளது. எனவே அத்தகைய வரவு செலவு த்திட்டத்தை ஐ.தே.க. எதிர்ப்பதுடன் திட்டத்திற்கு எதிராக வே வாக்குகளையும் அளிக்கும் என்றார்.tn

Web Design by Srilanka Muslims Web Team