நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும், ஜனநாயகக் கதைகளைக் கூறுவோரைச் சிறையில் அடைக்க வேண்டும்..! - Sri Lanka Muslim

நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும், ஜனநாயகக் கதைகளைக் கூறுவோரைச் சிறையில் அடைக்க வேண்டும்..!

Contributors
author image

Editorial Team

“நெருக்கடி நிலைமைகளிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமென்றால் அடுத்த சில ஆண்டுகளுக்கு நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.

அதுமட்டுமல்ல இராணுவ ஆட்சி எனக் கூவிக்கொண்டு ஜனநாயகக் கதைகளைக் கூறி வருவோரைச் சிறையில் அடைக்க வேண்டும்” என பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளரும், ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வார இதழொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

“இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை ஏற்றுக்கொண்டால் தமிழர்களாலும் ஆட்சியை நடத்த முடியும். நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி உடனடியாக நீக்கப்பட வேண்டும்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team