நாணாட்டான் பிரதேச செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் றிசாட் கோரிக்கை - Sri Lanka Muslim

நாணாட்டான் பிரதேச செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் றிசாட் கோரிக்கை

Contributors

மன்னார் நாணாட்டன் பிரதேச செயலக பிரிவில் பொன்தீவு கண்டல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தெளிவற்ற நிலைமை குறித்து முழுமையான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் நாணாட்டன் பிரதேச செயலாளரிடம் வேண்டியுள்ளார்.
யுத்த சூழ்நிலையினை அடுத்து தமிழ் முஸ்லிம் மக்கள் தத்தமது பிரதேசங்களில் மீள்குடியேறி வருகின்ற பொழுது அண்மையில் நாணாட்டான் பிரதேச செயலக பிரிவில் பூவரசங்குளம் மற்றும் பொன்தீவு கண்டல் கிராம மக்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் இதனை தடுத்து மக்கள் மத்தியில் உடன்பாடொன்றை எட்டுவதற்காகவே இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team