'நான் கூறிய கருத்தை தவறாகப் புரிந்துவிட்டார்கள்' - ஹரீன் விளக்கம்! - Sri Lanka Muslim

‘நான் கூறிய கருத்தை தவறாகப் புரிந்துவிட்டார்கள்’ – ஹரீன் விளக்கம்!

Contributors

நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் சஜித் பிரேமதாஸவோ அல்லது அநுரகுமார திஸாநாயக்கவோ பிரதமர் பதவியைப் பொறுப்பேற்று நாட்டை நிர்வகிக்க வேண்டும் என தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, இதனை ஐக்கிய மக்கள் சக்தி செய்யவில்லை என்றால் மாத்திரமே நான் சுயாதீனமாக இயங்குவேன் எனவும் அறிவித்தார்.

சவாலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே நான் சஜித்துக்கு கூறுகிறேன். அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்குப் புத்திஜீவிகள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். வணங்கிக் கேட்கிறேன். சவாலை ஏற்றுக்கொண்டு எதிர்க்கட்சியினர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்குவதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. நான் கூறியக் கருத்தைத் தவறாகப் புரிந்துக்கொண்டுவர்களே அவ்வாறு கூறுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team