நாமல் ராஜபக்ச அடுத்த ஜனாதிபதியாவதனை யாராலும் தடுக்க முடியாது!- ஈரான் தூதுவர் - Sri Lanka Muslim

நாமல் ராஜபக்ச அடுத்த ஜனாதிபதியாவதனை யாராலும் தடுக்க முடியாது!- ஈரான் தூதுவர்

Contributors

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச அடுத்த ஜனாதிபதியாவதனை யாராலும் தடுக்க முடியாது என ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் புய்சால் ராசீன் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சாக்கள் இந்த நாட்டுக்கு ஆற்றியுள்ள சேவைக்கு பிரதியுபகாரமாக மக்கள் நாமலையும் ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள்.

இன்று கொழும்பை விடவும் ஆச்சரியமிக்க அளவிற்கு அம்பாந்தோட்டை அபிவிருத்தி அடைந்துள்ளது.

உலகின் பலம்பொருந்திய நாடுகள் பயங்கரவாதப் பிடியில் சிக்கியிருந்த போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முயற்சியால் நாட்டில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஆசியாவின் பல நாடுகளில் ஜனாதிபதியை ஆசிய சிங்கம் என அழைக்கின்றனர்.

எனவே, ராஜபக்சாக்களை பாதுகாப்பதற்கு இன,மத, குல பேதங்களை களைந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் சமால் ராஜபக்சவின் பிறந்த நாளை முன்னிட்டு அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.lw

Web Design by Srilanka Muslims Web Team