நாமல் ராஜபக்ச வாகனங்கள் கொள்வனவு செய்வதற்காக இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு - Sri Lanka Muslim

நாமல் ராஜபக்ச வாகனங்கள் கொள்வனவு செய்வதற்காக இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது – எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

Contributors

(j.n)

 

நாமல் ராஜபக்ஷ நடத்தவுள்ள சொகுசு வாடகை வாகன சேவைக்காக, அதி சொகுசு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான வரியை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நீக்கியுள்ளார் என  தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி 600 சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன என  தெரிவிக்கப்படுகின்றன

கட்டுநாயக்க மற்றும் மாத்தலை விமானநிலையங்களில் இருந்து, கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டைக்கான அதி சொகுசு வாடகை வாகன சேவையை (டக்சி) நடத்துவதற்கு, ஜனாதிபதியின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார் என  தெரிவிக்கப்படுகின்றன.

இந்த வியாபாரத்துக்கான வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காக, இந்த வரி நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றதாக ஒரு தமிழ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது

 

Web Design by Srilanka Muslims Web Team