நாளை முதல் ரயில் சேவை வழமைக்கு..! - Sri Lanka Muslim
Contributors
author image

Editorial Team

நாளை (17) முதல் வழமை போன்று ரயில் போக்குவரத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி அனைத்து அலுவலக ரயில்களையும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அனைத்து தொலைதூர ரயில் சேவைகளும் நாளை முதல் இயக்கப்படும் எனவும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்புக்கான இரவு நேர அஞ்சல் ரயில் மாத்திரம் இயக்கப்படாது என காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

அதன்படி நாளையதினம் 374 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team