நிதிச் சிக்கலை சமாளிக்க முடியும் - கத்தார் - Sri Lanka Muslim

நிதிச் சிக்கலை சமாளிக்க முடியும் – கத்தார்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


தனது அண்டை நாடுகளுடன் தூதரக உறவுகளில் பிரச்சினையை சந்தித்து வரும் கத்தார் தன்னிடம் போதுமான நிதியாதாரங்கள் இருப்பதால் நிதிச் சிக்கலைகளை சந்திக்க இயலும் என்று கூறியுள்ளது.

தங்களிடம் தங்கமாகவும், முதலீடுகள் மூலமாகவும் சுமார் 340 பில்லியன் டாலர்கள் அளவிற்கு நிதியாதாரங்கள் உள்ளன. இது எத்தகைய சிக்கலையும் சந்திக்க போதும் என்றார் மத்திய வங்கியின் ஷேக் அப்துல்லா அல்-தானி.

”எங்களது நிதி நிலையை சரி செய்துக் கொள்ள சர்வதேச செலாவணி நிதியத்துடன் இணைந்து எங்களது சட்டத்தையும், கணக்கு தணிக்கை மற்றும் மீளாய்வுகளையும் செய்து கொள்கிறோம். இது போன்ற அசாதாரண சூழலை நாங்கள் சந்திக்க தரமான, தனித்ததொரு அமைப்பை வைத்துள்ளோம்.” என்றார் அல்-தானி.

கத்தார் தன்னிடம் போதுமான அளவிற்கு அரசுப்பத்திரங்களும் இருப்பதாகவும் கூறுகிறது.

உலகின் முதல் நிலை எரிவாயு உற்பத்தியாளரான கத்தார் தனது உற்பத்தியை கட்டுப்படுத்தவும், மாற்றுப்பாதைகளில் தனது ஏற்றுமதியை தொடரவும் போதுமான ஏற்பாடுகளுடன் உள்ளது என்று கூறப்படுகிறது. தவிர அயல்நாட்டு நிதி வளங்கள் கத்தாரை விட்டுச் சென்றாலும் கூட தங்களிடமுள்ள நிதியாதாரங்களைக் கொண்டு சமாளிக்க முடியும் என்று கத்தார் கூறுகிறது.

“எங்களது வங்கி சேவை போதுமான முதலீடுகளுடனும். பேஸல் மூன்று எனும் உயர் தரமான வங்கிச் செயல்பாடுகளுடன் இயங்கி வருகிறது. எனவே இப்போதைக்கு நிதியாதாரங்கள் குறித்து நாங்கள் அஞ்சவில்லை’ என்கிறார் அல்-தானி.

Web Design by Srilanka Muslims Web Team