நிதியமைச்சர் நிவாரணத்தை வழங்காவிட்டால் எரிபொருள் விலை ஓர்இரு நாட்களில் அதிகரிக்கும் - கம்மன்பில..! - Sri Lanka Muslim

நிதியமைச்சர் நிவாரணத்தை வழங்காவிட்டால் எரிபொருள் விலை ஓர்இரு நாட்களில் அதிகரிக்கும் – கம்மன்பில..!

Contributors
author image

Editorial Team

நிதியமைச்சர் நிவாரணத்தை வழங்காவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில(udaya gammanpil) தெரிவித்துள்ளார். கொழும்பில் புதன்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை ரூ.15/-மற்றும் ஒரு லீட்டர் டீசல் ரூ. 25/- ஆல் உயர்த்துமாறு லங்கா ஐஓசி கேட்டுக் கொண்டதாக அமைச்சர் கூறினார். இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனமும் விலை உயர்வை கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team