நிந்தவூரில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது! - Sri Lanka Muslim

நிந்தவூரில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Contributors

அம்பாறை, நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் ஐஸ் போதைப்பொருளை கடத்திச் சென்ற 34 வயது நபர் ஒருவர், அட்டப்பள்ளம்  சந்தியில் வைத்து நேற்றிரவு (08) விசேட   அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

பெரியநீலாவணை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, அப்பகுதிக்கு சிவில் உடையில் விரைந்த அதிரடிப் படையினர், குறித்த நபரைக் கைது செய்தனர்.

விற்பனைக்காக கொண்டு செல்ல முற்பட்ட  30 கிராம் ஐஸ் போதைப்பொருள் அவரிடமிருந்து கைது செய்யப்பட்டதுடன்,  மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர் நீண்ட காலமாக  போதைப்பொருள் கடத்திச் சென்று விற்பனையில் ஈடுபட்டு வருபவர் எனப் படையினர் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை  சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஏ.எல்.எம்.ஷினாஸ்

Web Design by Srilanka Muslims Web Team