நிந்தவூரில் கரையொதுங்கிய இராட்சத கடலாமை! - Sri Lanka Muslim

நிந்தவூரில் கரையொதுங்கிய இராட்சத கடலாமை!

Contributors

அம்பாறை மாவட்டம், நிந்தவூர்  கடற்கரையில் நேற்று (29) இரவு, சுமார் 3 அடி, 150 கிலோ எடையுடைய உயிருடன் கடலாமை ஒன்று  உயிருடன்  கரையொதுங்கியுள்ளதாக, நிந்தவூர் வெளவால் ஓடை   மீனவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து மீனவர்களால் சம்பந்தப்பட்ட   கடற்றொழில் திணைக்கள உத்தியோகர்கள், பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர, ஏற்கனவே  அம்பாறை மாவட்டம், கல்முனை  பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரியநீலாவணை பாண்டிருப்பு  கடற்கரை பகுதியில்  கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிருடன் கடலாமைகள் கரை ஒதுங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Web Design by Srilanka Muslims Web Team