நிந்தவூர் சம்பவத்தில் கைதான 14 பேரும் 50000 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை - Sri Lanka Muslim

நிந்தவூர் சம்பவத்தில் கைதான 14 பேரும் 50000 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை

Contributors

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
கடந்த 19ம் திகதி நிந்தவூர் பிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை  நேற்று (22) சம்மாந்துறை நீதிவான் நிதி மன்றில் நீதிபதி கே.கருணாகரன் முன்னிலையில்  எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது அரசாங்கத்தின் தரப்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களான தென்னக்கோன், பவித்திர தயரத்தின மற்றும் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க ஆகியோரும் பிரதிவாதிகளின் தரப்பில் சிரேஷ;ட சட்டத்தரணிகளான எஸ்.எம்.எம்.முஸ்தபா, ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.நஸீல், றியாஸ் ஆதம,; எஸ்.எம்.அறூஸ், ஆன்வர் சியாட், கே.எல்.சலீம், றிம்சியா, சர்மிலா, பானு ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இருதரப்பு வாதப் பிரதிவாதங்களின் பின்னர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த 14 பேரும் 50000 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிபதி கே.கருணாகரன் உத்தரவிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team