நிந்தவூர் பிரச்சினை தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் றிஸாட் அதிருப்தி

Read Time:3 Minute, 13 Second

(எஸ்.அஷ்ரப்கான்)

கடந்த சில தினங்களாக நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கின்ற அமைதியின்மை தொடர்பாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் பொலிஸ் மா அதிபரிடம் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். இது விடயமாக அமைச்சர் குறிப்பிடும்போது,

நிந்தவூரில் கடந்த சில தினங்களாக இடம்பெற்றுவரும் கொள்ளை, திருட்டுச்சம்பவங்கள் தொடர்பாக சம்மாந்துறைப்பொலிஸில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து விழிப்புக்குழு ஏற்படுத்தப்பட்டு அவ்விழிப்புக்குழு பொதுமக்களின் பொதுமக்களின் துணையுடன் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த சிலர் சீருடையை மாற்றி சாதாரண் உடையை அணிந்துகொண்டு இருந்த நிலையில் கையும், மெய்யுமாக பிடிபட்டிருக்கின்றார்கள். அவர்களை சம்மாந்துறைப் பொலிசாரிடம் ஒப்படைப்பதற்குப்பதிலாக விசேட அதிரடிப்படையினர் காப்பாற்றிக்கொண்டு சென்றதேன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விசேட அதிரடிப்படையினர் தமது கடமை நடவடிக்கைகளுக்காக சிவில் உடையில் வருவதாக இருந்தால் தங்களது முகாமிலிருந்து சிவிலுடையில் வந்திருக்க முடியும். அவ்வாறில்லாமல் சீருடையில் வந்து நிந்தவூரில்வைத்து திருட்டுத்தனமாக உடையை மாற்றவேண்டியதன் அவசியம் என்ன ? மட்டுமல்லாமல் சாதாரண சிவில் நடவடிக்கைகள் பொலிசாருக்குரிய கடமையாகும். அவ்வாறான நிலையில் விசேட அதிரடிப்படையினர் என்ன கடமைக்காக அங்கு வந்தார்கள் ? அவ்வாறுதான வருவதாக இருந்தால் சம்மாந்துறைப் பொலிஸாருக்கு தெரிவிக்காமல்வந்ததேன் ?

எனவே, இந்த விசேட அதிரடிப்படையினரின் செயற்பாட்டிற்குப்பின்னால் இருக்கின்ற மர்மம் துலக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக பொலிஸ் மா அதிபர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் றிஸாட் பதியுதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்குப்பதிலளித்த பொலிஸ் மா அதிபர் உயர்மட்ட விசாரணைகள் இதுதொடர்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  குற்றவாளிகளாகக் காணப்படுமிடத்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் உறுதியளித்துள்ளார்.

Previous post வடக்கு முஸ்லிம்: திரும்பிவந்து பார்க்கின்ற போது வாழ்வதற்கு வீடுகள் இருக்கவில்லை
Next post கிழக்கில் சுவீகரிக்கப்பட்டு வரும் காணிகளை மீட்டெடுக்க ஒரு கலந்துரையாடல் !