நிமல் சிறிபால டி சில்வாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கு எதிராக தடையுத்தரவு! - Sri Lanka Muslim

நிமல் சிறிபால டி சில்வாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கு எதிராக தடையுத்தரவு!

Contributors

துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு எதிராக தடையுத்தரவு பிறப்பித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிபதி பூர்ணிமா பரணகம, இன்று (07) கட்டளையிட்டார்.

எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையில் குறித்த தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால சில்வாவை நீக்குவது அல்லது கட்சிக்குள் செயற்படவிடாமல் தடுப்பது ஆகிய செயற்பாடுகளை இடைநிறுத்தியே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை பெறும் எந்தவொரு உறுப்பினரும் கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கப்படுவார்கள் என, அண்மையில் சுதந்திரக்கட்சி அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில், குறித்த தீர்மானத்திற்கு எதிராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்றையதினம் (07) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team