நியூசிலாந்து- இந்தியா; மூன்றாவது போட்டி சமநிலை » Sri Lanka Muslim

நியூசிலாந்து- இந்தியா; மூன்றாவது போட்டி சமநிலை

Contributors

நியூசிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் நியூசிலாந்து அணி 2-0 என்ற நிலையில் முன்னணியில் உள்ளது, இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்து ஈடன்பார்க் மைதானத்தில் இன்று நடந்தது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் அணித்தலைவர் டோனி பந்து வீச முடிவு செய்தார்.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 314 ஓட்டங்கள் குவித்தது, அந்த அணியில் அபாரமாக விளையாடிய மார்டில் குப்தில் 111 ஓட்டங்கள் குவித்தார்.
பின்னர் 315 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில், வழக்கம் போல் தொடக்க வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
4 சிக்ஸர்கள் அடித்து அசத்திய ரோகித் சர்மா 38 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்து ஆண்டர்சன் பந்தில் ஆட்டம் இழந்தார்.
மற்றொரு தொடக்க வீரர் தவான் 28 ஓட்டங்களுக்கும், கோஹ்லி 6 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தார்.
பின் வந்த வீரர்களும் ஓரளவுக்கு கைகொடுக்க, வெற்றிக்கு 29 ஓட்டங்கள் தேவை இருந்த நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடைசி கட்டத்தில் அபாரமாக விளையாடிய ஜடேஜா 45 பந்துகளில் 66 ஓட்டங்கள் குவித்தார். இந்திய அணி நிர்ணையிக்கபப்ட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ஓட்டங்கள் எடுத்ததால் இந்த போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

Web Design by Srilanka Muslims Web Team