நியூசிலாந்து தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு - Sri Lanka Muslim

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Contributors

2(2457)

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றவுள்ள நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான தொடருக்கான இலங்கை அணியின் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

24 பேர் கொண்ட குழாமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகள் அடங்கிய இத்தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டியோடு ஆரம்பிக்கவுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் குழாமிலிருந்து இறுதி 15 பேர் கொண்ட குழாம் தெரிவு செய்யப்படும் எனத் தெரிகிறது. இன்றையதினம் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற இலங்கையின் திலகரட்ண டில்ஷான் இந்தக் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

திலகரட்ண டில்ஷான் தவிர, ஏனைய சிரேஷ்ட வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன, லசித் மலிங்க, நுவான் குலசேகர, ரங்கன ஹேரத் ஆகியோரும் இக்குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

அறிவிக்கப்பட்டுள்ள குழாம்:

அஞ்சலோ மத்தியூஸ், திலகரட்ண டில்ஷான், திமுத் கருணாரத்ன, குசால் ஜனித் பெரேரா, குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன, லஹிரு திரிமன்ன, டினேஷ் சந்திமால், அஷன் பிரியஞ்சன், கித்துருவன் விதானகே, லசித் மலிங்க, நுவான் குலசேகர, சுரங்க லக்மால், ஷமின்ட எரங்க, திஸர பெரேரா, ரங்கன ஹேரத், சச்சித்திர சேனநாயக்க, அஜந்த மெய்னஸ், சீக்குகே பிரசன்ன, சத்துரங்க டீ சில்வா, இசுரு உதான, றமித் றம்புக்வெல்ல, டில்ருவான் பெரேரா, மிலிந்த சிரிவர்தன.

Web Design by Srilanka Muslims Web Team