நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்!

Read Time:2 Minute, 27 Second
அவுஸ்திரேலியாவில் இன்று (09) நடைபெற்ற, உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி போட்டியில், நியூஸிலாந்து அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் பாகிஸ்தான் நுழைந்தது.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.

அரையிறுதியில் நியூஸிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான். முக்கியமாக பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான்நம் இந்தப் போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர் செய்திருந்தனர்.

153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விரட்டியது. போல்ட், சவுதி, ஃபெர்குசன், சான்ட்னர், சோதி போன்ற நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு இந்த போட்டியில் கைகொடுக்கவில்லை.

தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணி நேர்த்தியாக ஓட்டங்களால் விரட்டியது. முதல் விக்கெட்டிற்கு பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வானும் 122 ஓட்டங்களை பெற்றனர்.

பாபர் 42 பந்துகளில் 53 ஓட்டங்கள், ரிஸ்வான், 43 பந்துகளில் 57 ஓட்டங்கள், முகமது ஹாரிஸ், 30 ஓட்டங்கள் எடுத்து, விக்கெட்டுகளை இழந்தனர்.

மறுபக்கம் ஷான் மசூத், 3 ஓட்டங்கள் எடுத்தார். இஃப்திகார் ஓட்டம் ஏதும் எடுக்கவில்லை. 19.1 ஓவர்கள் முடிவில் அந்த அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது பாகிஸ்தான். நியூஸிலாந்து தரப்பில் போல்ட் 2 விக்கெட்டுகளையும், சான்ட்னர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.

Previous post அமெரிக்காவில் சுகபோகமாக வாழும் படுகொலையாளி பசில் – பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு!
Next post 80 இலட்சம் ரூபாய் பண மோசடி: அருட்தந்தைக்கு விளக்கமறியல்!