நிர்வாண நடனமாடிய இளைஞருக்கு கசையடி தண்டனை-சவூதி அரேபியாவில் - Sri Lanka Muslim

நிர்வாண நடனமாடிய இளைஞருக்கு கசையடி தண்டனை-சவூதி அரேபியாவில்

Contributors

சவூதி அரேபியாவில் ” நிர்வாண நடனம்” என்றறியப்படும் வழக்கு ஒன்றில் , நாட்டின் தார்மீக விதிகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களுக்கு மொத்தமாக 4,000 கசையடிகளும், 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது.

இந்த நான்கு இளைஞர்களும் தலைநகர் ரியாத்துக்கு வடமேற்கே உள்ள போரய்டா என்ற இடத்தில் ஒரு கார் மீது ஏறி நின்று நடனமாடி அதை தாங்களே படம் பிடித்துக்கொண்டனர்.

 இந்த நடனமாடியவர்களில் ஒருவர் நிர்வாணமாக நடனமாடினார் .

இந்த வீடியோவை அவர்கள் இணையத்திலும் பிரசுரித்தனர்.

நிர்வாண நடனமாடியவருக்கு மிகக் கடுமையான தண்டனையாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2,000 கசையடிகளும், 13,000 டாலர்களுக்கு மேலான அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனைகள் மிகவும் லேசானவை என்று அரச தரப்பு வழக்குரைஞர் ஆட்சேபித்தார்.

இந்த நால்வருக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை இருக்கிறது.

Web Design by Srilanka Muslims Web Team