நிஸாம் காரியப்பருக்கு எதிராக சுவரொட்டிகள் - Sri Lanka Muslim

நிஸாம் காரியப்பருக்கு எதிராக சுவரொட்டிகள்

Contributors

கல்முனை பிரதி மேயரான சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கு எதிராக சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை சுவரொட்டிகள் ஓட்டப்பட்டடுள்ளன. இந்த சுவரொட்டிகள் சாய்ந்தமருது பிரதேச பிரதான வீதி உட்பட பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

கல்முனை மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிபை இராஜினாமா செய்யுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையிலேயே பிரதி மேயர் நிசாம் காரியப்பருக்கு எதிராக குறித்த சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன.

தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை உம்மிடம் இல்லையா?, நீதித்துறையில் பணியாற்றும் நிசாம் காரியப்பருக்கு நீதி தெரியாதா? போன்ற பல வாசகங்கள் குறித்த சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ™

25n1

 

25n2

 

25n3

Web Design by Srilanka Muslims Web Team