நீங்கள் கட்டாரில் தொழில் புரிபவரா?: உங்களுக்கோர் மகிழ்ச்சியான செய்தி - Sri Lanka Muslim

நீங்கள் கட்டாரில் தொழில் புரிபவரா?: உங்களுக்கோர் மகிழ்ச்சியான செய்தி

Contributors
author image

Editorial Team

வெளிநாட்டு ஊழியர்களுக்காக முதல் முறையாக குறைந்தபட்ச ஊழியத்தை வழங்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தமது வாழ்க்கைச் செலவினங்களுக்கு ஏற்ப ஊதியத்தைப் பெறுவதை உறுதிப்படுத்தும் முகமாக அவர்களுக்கான ஆகக்குறைந்த ஊதிய அளவு உட்பட புதிய நடைமுறைகள் கட்டாரில் அறிமுகமாவுள்ளது.

வெளிநாட்டு பணியாளர்களின் உரிமைகளை அங்கீகரிக்கப்பட வேண்டிய கட்டாயத்திற்கு கட்டார் அரசாங்கம் முகங்கொடுத்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண கால்பந்து போட்டிக்கு அனுசரனை வழங்குவதற்கு கட்டார் தயாராகி உள்ளது. இதனைத் தொடர்ந்து கட்டாரில் பணியாற்றும் வெளிநாட்டு பணியாளர்களின் உரிமைகள் தொடர்பில் உலகின் கவனம் திரும்பியுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் கட்டார் அரசாங்கத்திற்கு இடையில் சந்திப்பு ஒன்று நடத்துவதற்கு ஆயத்தமாகிய போது கட்டார் இந்த புதிய தொழிலாளர் சட்டம் சீர்திருத்தங்கள் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க விசேட அம்பசமாகும்.
வெளிநாட்டு பணியாளர்களை சித்திரவதைக்கு உட்படுத்துவதனை தடுக்குமாறு சர்வதேச தொழிலாளர் அமைப்பு, இதற்கு முன்னர் கட்டார் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு, கட்டார் நாட்டின் புதிய தொழிலாளர் சட்ட திருத்தங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. புதிய சீர்திருத்தங்கள் நவீன அடிமைத்தனத்தின் முடிவின் தொடக்கமாக இருக்கும் என பொது செயலாளர் ஷெரன் பரோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் வெளிநாட்டு பணியாளர்களின் உரிமைகள் தொடர்பில் வளர்ச்சி ஒன்றை காட்ட வேண்டும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு கட்டார் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

கட்டாரில் 2 மில்லியன் வெளிநாட்டு பணியாளர்கள் சேவை செய்து வருகின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களாகும்.

இலங்கையை சேர்ந்த ஒரு இலட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் கட்டாரில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கட்டாரில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஆகக் குறைந்த ஊதிய அளவு நிர்ணயிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். கட்டாரின் இந்த நகர்வுக்கு சர்வதேச வாணிப ஒன்றிய கூட்டமைப்பு வரவேற்பளித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team